கிளாம்பாக்கம் ரயில் நிலையம்.. எப்போது பயன்பாட்டுக்கு வரும்.. பயணிகளுக்கு இனிப்பான அப்டேட்!
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவுகிறது. வெளியூர் செல்லும் போதும், வரும் போதும் சிரமம் இன்றி நகருக்குள் வர முடியும் என்பதால் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் எப்போது பணிகள் முடிந்து திறக்கப்படும் என பயணிகள் காத்திருக்கிறார்கள். இதனிடையே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் தொலை தூரங்களுக்கும் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அரசு, தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்துமே கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிதாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேன்டும் என்று அரசு உத்தரவிட்டது.

கிளாம்பாக்கம்: கடந்த டிசம்பர் மாத இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையின் மிகப்பெரிய அடையாளமாக இந்த பேருந்து நிலையம் மாறியிருக்கிறது. வணிக வளாகத்தை மிஞ்சும் வகையில் உயர்தர கட்டமைப்புக்ளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. துவக்கத்தில் கடைகள் இல்லை, ஏடிஎம்கள் இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. தொலை தூரம் செல்லும் பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ரயில் நிலையம்: இதையடுத்து படிப்படியாக அங்கே கடைகள் அதிகரிக்கப்பட்டன. தற்போது 5 வங்கிகளின் 5 ஏடிஎம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடிகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தூய்மையாக பராமரிக்கப்படுவதும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருந்த போதிலும் கிளாம்பாக்கம் வந்து சேருவதற்குள் பயணிகள் கடும் பாடு பட வேண்டிய நிலையே உள்ளது.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்: கோயம்பேட்டில் இருந்து தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் புறநகர் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் சிரமம் இன்றி கிளாம்பாக்கம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் ரயில் நிலையம் எப்போதும் கட்டி முடிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக பேருந்து நிலையத்திற்கு ஆகாய நடைமேடை அமைக்கப்படுகிறது.
சேகர்பாபு பதில்: இதனால், பயணிகள் எளிதாக கிளாம்பக்கம் பஸ் ஸ்டாண்டை ரீச் பண்ண முடியும். எனவே இந்த ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நிலவுகிறது. இந்த நிலையில் தான் அமைச்சர் சேகர் பாபு, ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது குறித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சேகர் பாபு கூறியதாவது:-
வரும் மார்ச் மாதம்: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க ரயில்வே கோரிய நிதியை சிஎம்டிஏ வழங்கியிருக்கிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் முன்னேற்றம் குறித்து முடிக்க சிஎம்டிஏ அதிகாரிகள் மூலமாக தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து அந்த பணிகளை ஆய்வு செய்து வருகிறொம். இவ்வாறு அவர் கூறினார். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சொல்லியிருப்பது பயணிகள் இடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications