சம்மருக்குள் மொத்தமாக மாறிடும்! கிளாம்பாக்கம் பயணிகளுக்கு குட்நியூஸ்.. ரயில் நிலையம் குறித்த அப்டேட்
சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் இனி தாம்பரம் வரை இயக்கப்படாது என்றும், கிளாம்பாக்கத்தோடு நிறுத்தப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளதால், அங்கிருந்து சென்னைக்கு செல்ல விரைவில் ரயில் நிலையத்தை திறக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு நேரடியாக பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட்டு செல்கின்றன. நெல்லை, தூத்துக்குடி, உடன்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் என தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்தே புறப்பட்டு செல்கின்றன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சென்னையில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல புறநகர் மின்சார ரயில் வசதி இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எப்போது திறக்கப்படும்
தொலை தூரங்களுக்கு செல்லும் பயணிகள் லக்கேஜ்கள், குழந்தைகளுடன் பயணிப்பதால், கிளாம்பாக்கம் போய் சேர்வதற்குள் குறைந்தது இரண்டு பஸ்களில் மாற வேண்டியுள்ளதாக ஆதங்கம் தெரிவித்தனர். இதனால் பயணிகள் வசதிகளை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வேக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன்படி, ஊரப்பாக்கத்திற்கும் வண்டலூருக்கும் இடையே கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைகிறது.
இந்த ரயில் நிலையத்தில் இருந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு நேரடியாக பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ரயில் நிலையம் பணிகள் கடந்த மாதத்துடன் முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவு பெறாததால் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

50 சதவிகித பணிகள் நிறைவு
சென்னை டிவிஷனல் ரயில்வே மேனேஜர் பி விஸ்வநாத் எர்யா, இது தொடர்பாக கூறியதாவது:- கிளம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மூன்று பிளாட்பார்ம்களிலும் தரைப்பகுதி பணி நிறைவு பெற்றுள்ளது. கற்கள் பதிப்பது உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பிளாட்பார்ம்களில் கிரில்கள் அமைப்பது, எலக்ட்ரிக் பணிகள் உள்ளிட்டவை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பணிகள் முடிவு பெற்று இருக்கும்.
கூடுதலாக 100 பேருந்துகள்
ஆனால் மழை நீர் வெளியேற குழாய் அமைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை வைத்தது. இதனால், தாமதம் ஆனது. கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு 20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கிளாம்பக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையம் வரையில் மேம்பாலம் அமைக்கும் பணியை சிஎம்டிஏ மேற்கொள்கிறது. இந்த ஆகாய நடைமேடைகள் எஸ்கலேட்டர் லிஃப்ட் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது.
இதற்காக ரூ.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், கிளாம்பாக்கத்தில் ஏற்படும் நெரிசலை சமாளிக்க கூடுதாலாக 100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications