சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹெட்மெட் அணிய சொல்வது ஒரு தப்பாப்பா? .. கிரண்பேடி டென்ஷன்!

ஹெல்மட் அணிய சொல்வது ஒரு தவறா என கிரண்பேடி கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஹெல்மெட் அணிய சொல்வது ஒரு தவறா? கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்துவது ஒரு தவறா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் ஆளுநர் கிரண்பேடி.

புதுச்சேரிக்கு ஆளுநராக எப்போது கிரண்பேடி பொறுப்பேற்றாரோ அப்போதிருந்தே அவருக்கும், முதலமைச்சருக்கும் பனிப்போர்தான்.

பொழுது விடிந்து பொழுது போனால் இவர்களை பற்றின செய்திகளே புதுச்சேரியில் பிரதானமாக இருக்கும். ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் ஹெல்மட் விவகாரம் எழுந்தது.

ஹெல்மட் விவகாரம்

ஹெல்மட் விவகாரம்

வாகன ஓட்டிகள் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிய வேண்டும் என கிரண்பேடி உத்தரவு பிறப்பிக்க.. பொதுமக்களுக்கு தேவை விழிப்புணர்வே தவிர, அபராதம் கூடாது என்று நாராயணசாமி தெரிவிக்க.. இந்த கருத்தை ஆளுநர் மறுக்க.. அதனை நாராயணசாமி எதிர்க்க.. ஆக கடைசியில் இன்று புதுச்சேரி வரலாற்றில் இல்லாத ஒரு விஷயமாக, ஆளுநருக்கு எதிரான தர்ணா போராட்டத்தை முதர்வர் கையில் எடுத்து உள்ளார். 2-வது நாளாகவும் இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில் டெல்லி செல்வதற்காக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த கிரண்பேடி, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:

டைம் தர வேண்டாமா?

டைம் தர வேண்டாமா?

இப்படி ஒரு முதல்வர் தர்ணாவில் ஈடுபடுவது முறையானதா? 36 பிரச்னைகள் சம்பந்தமாக எனக்கு ஒரு கடிதம் பிப்ரவரி,7 ம்தேதி நாராயணசாமி எனக்கு அனுப்பினார். அதில் பாதி பிரச்சனை தீர்ந்துவிட்டது. அவரது கடிதத்திற்கு பதிலளிக்க எனக்கு டைம் தர வேண்டாமா?

இது ஒரு தப்பா?

இது ஒரு தப்பா?

அவகாசமே தராமல், முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படி தர்ணா செய்கிறார்? ஹெட்மெட் அணிய சொல்வது ஒரு தப்பா? கோர்ட் உத்தரவை அமல்படுத்த வலியுத்தியது ஒரு தப்பா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

English summary
Kiran Bedi has questioned whether the Chief minister Narayanasamy's Dharna is right?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X