Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kiruthiga: உதயநிதி கேட்ட கேள்விக்கு கை தூக்கிய கிருத்திகா! 24 வருஷம் கழிச்சி! ரொம்ப கஷ்டமாம்! கலகல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: காதல் திருமணம் ரொம்ப கஷ்டம் என உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு அவரது மனைவி கிருத்திகா உதயநிதி கிண்டலாக பதில் அளித்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

சென்னையில் கலைவாணர் அரங்கில் 50 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. அவர்களுக்கு தலா ரூ 2 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் திமுக அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

kiruthika udhayanidhi

அப்போது அவர் பேசுகையில், "இங்கு நிறைய பேர் 90ஸ் கிட்ஸ் இருப்பார்கள் என நம்புகிறேன். நான் சொல்வது கீழே இல்லை, மேடையில் இருப்பார்கள். என் அருகே இருந்த தம்பதிகளுக்கு தாலி எடுத்துக் கொடுக்கும் போது அவர்கள் முகத்தில் கூடுதல் மகிழ்ச்சி இருந்தது.

எனக்கு சந்தேகம் வந்து அவர்களிடம் கேட்டேன், "என்ன தம்பி காதல் திருமணமா இல்லை பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா என கேட்டேன். அதற்கு ஒருவர், "ஆமாண்ணே காதல் திருமணம்தான். இரண்டரை வருடம் லவ் செய்தேன்" என்றார்.

இன்னொரு பெண்ணிடம் கேட்ட போது, "காதல் திருமணம்தான், ஆனால் இப்போ Arrange marriage ஆகிவிட்டது" என சொன்னதில் மகிழ்ச்சி. அனேகமா இந்த மேடையில் நிறைய பேர் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என கூறிய உதயநிதி, காதல் திருமணம் என்பவர்கள் கை தூக்குங்க என்றார்.

kiruthika udhayanidhi

உடனே நிறைய பேர் கையை தூக்கினர். கிட்டதட்ட 100 சதவீதம் காதல் திருமணம்தான். இது கூடுதல் மகிழ்ச்சி! எனக்கும் காதல் திருமணம்தான். காதலித்து திருமணம் செய்வதுதான் இருப்பதிலேயே கஷ்டமானது.

முதலில் காதலை சொல்ல தைரியம் வேணும். அதன் பிறகு அவரை இம்ப்ரஸ் செய்ய நிறைய விஷயங்களை செய்ய வேண்டும். அவர்களின் மனதிற்கு பிடித்த மாதிரி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நடந்துக்குற மாதிரியாவது நடிக்கணும்.

இப்படி கஷ்டப்பட்டு பொண்ணு, பையன்கிட்ட ஓகே வாங்கிட்டு, கல்யாணத்திற்காக அவர்களது பெற்றோரிடமும் சம்மதம் வாங்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற மாதக் கணக்கு, வருஷக் கணக்கு கூட ஆகும். அதுவரை காத்திருக்க வேண்டும். அப்படியே அவர்களிடம் சம்மதம் வாங்கினாலும், திடீரென பையனுக்கு பெரியப்பா, பொண்ணுக்கு மாமா, முறைப்பையன்னு வருவாங்க.. அவங்களையும் சமாளிக்கணும்.

இத்தனை கஷ்டங்களையும் கடந்து வந்து இன்று நிறைய பேர் காதல் திருமணம் செய்ய இங்கு வந்திருக்கிறார்கள். அமைச்சர் சேகர்பாபு இந்த திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். இன்று போல் எப்போதும் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ கிளிப்பிங்ஸ்ஸை தனது சமூகவலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள உதயநிதி மனைவி கிருத்திகா, கையை தூக்குவது போன்று எமோஜியை போட்டு "ரொம்ப கஷ்டம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை உதயநிதிக்கும் டேக் செய்துள்ளார்.

இதை கண்ட நெட்டிசன்கள் சிரித்து வருகிறார்கள். மேலும் "உதய் அண்ணே இன்னிக்கு சோறு கட்" என்றும் "உதய் அண்ணே நீ வீட்டுக்கு வருவல்ல" ன்னு அண்ணி காத்திருக்காங்க. சிக்கிடாதீங்கன்னு அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

கிருத்திகா, உதயநிதிக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இன்பநிதி, தன்மயா ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+