சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகளுக்கு பட்ஜெட், கடன் தள்ளுபடி... காங்கிரசோட இந்த வாக்குறுதிகளை கவனித்தீர்களா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Congress Manifesto: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு- வீடியோ

    சென்னை: விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மீடியாக்களுக்கு சுதந்திரம், மருத்துவ உரிமை உள்ளிட்ட பல அதிரடியாக வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி இந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி நிறைவடைகிறது. தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில் விவசாயத்துக்கு தனி பட்ஜெட், விவசாயிகள் கடன் தள்ளுபடி, ஏழைகளின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 72 ஆயிரம், மத வன்முறை தடுப்பு, மருத்துவ உரிமை என பல வாக்குறுதிகள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.

    அவற்றில் சில முக்கியமான வாக்குறுதிகளை இப்போது விரிவாக பார்க்கலாம்.

    மாஸ்டர் பிளான்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? மாஸ்டர் பிளான்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா?

    பயிர் கடன் தள்ளுபடி

    பயிர் கடன் தள்ளுபடி

    காங்கிரஸ் கட்சி அளித்து வாக்குறுதிகளில் மிக முக்கியமானது என்றால் விவசாய கடன் தள்ளுபடி. இந்த வாக்குறுதி கொடுத்துதான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாகத்தான் இப்போது தனது தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

    விவசாய பட்ஜெட்

    விவசாய பட்ஜெட்

    விவசாய கடன் தள்ளுபடியைப் போலவே விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பயிர்களுக்கு உரிய ஆதார விலை கிடைக்க நடவடிக்கை, குறைவான உற்பத்தி விலை, விவசாயிகளுக்கு கடன், மற்றும் விவசாய கடனை கட்ட முடியாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை ரத்து என பல கவர்ச்சி வாக்குறுதிகளை அள்ளி தெளித்துள்ளது காங்கிரஸ்.

    தீவிரவாத அச்சுறுத்தல்

    தீவிரவாத அச்சுறுத்தல்

    உள்நாட்டில் பாதுகாப்புக்கு மிக அச்சுறுத்தலாக இருப்பது. 1.தீவிரவாதம், 2. தீவிரவாதிகளின் ஊடுருவல் 3.மாவோயிசம் (அல்லது) நக்சலிசம் மற்றம் 4. சாதிய, மத வன்முறை. ஆகியவை தான். இந்த நான்கு அச்சுறுத்தல்களுக்கும் தனித்தனியாக தக்க பதிலடியை காங்கிரஸ் அரசு கொடுக்கும். தீவிரவாதம், தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு எதிராக சமரசம் இல்லாத கடுமையான நடவடிக்கையை காங்கிரஸ் அரசு எடுக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    நக்சலைட்டுகள்

    நக்சலைட்டுகள்

    மாவோயிஸத்தை தடுக்க காங்கிரஸ் கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது. மாவோயிஸத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த அப்பகுதி மக்களின் இதயங்களை வென்று மாவோயிஸத்தை வேரறுப்போம் என காங்கிரஸ கூறியுள்ளது.

    மத வன்முறை

    மத வன்முறை

    சாதிய மற்றும் மத வன்முறைகளை தடுக்க அதி உறுதியான நடவடிக்கைகளை காவலர்கள் மூலம் மேற்கொள்வோம். சாதிய மற்றும் மத வன்முறைகளை தூண்டுவோரை நீதிக்கு முன் கொண்டுவந்து நடவடிக்கை எடுப்போம்.

    படை வீரர்களுக்கு சலுகை

    படை வீரர்களுக்கு சலுகை

    பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் சிஆர்பிஎப் மற்றும் பாதுகாப்ப படை வீரர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிதி உதவி, கல்வி, மருத்துவ உதவியை காங்கிரஸ் நிச்சயம் அளிக்கும். சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளுக்காக தனியாக சைனிக் பள்ளிகள் ஆரம்பிப்போம் என்ற வாக்குறுதியையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    கட்டாயமாகும் ஆதார்

    கட்டாயமாகும் ஆதார்

    மக்களுக்கு வழங்கப்படும் அரசின் மானியம் உரியவர்களுக்கு மட்டும் செல்லும் வகையிலும், மற்றவர்களுக்கு செல்லாத வகையிலும் உருவாக்கப்பட்ட ஆதார் எண் திட்டம் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும். பயோமெட்ரிக் அடையாளத்திற்கு பதில் மாற்று அடையாளர்கள் அனுமதிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

    ஊழலுக்கு எதிராக

    ஊழலுக்கு எதிராக

    ரஃபேல் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும் என வாக்குறுதி அளித்துள்ளது. பாஜக கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட அரசின் பல்வேறு ஒப்பந்தங்கள் ஆராயப்படும் என்றும், குறிப்பாக ரஃபேர் ஒப்பந்தம் ஆராயப்பட்டு அதில் உறுதியான நடவடிக்கை காங்கிரஸ் எடுக்கும் என வாக்குறுதி அளித்துள்ளது.

    பாகுபாடு கூடாது

    பாகுபாடு கூடாது

    தேசிய பாகுபாடு தடுப்பம் சட்டம் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.இந்த சட்டத்தின் படி, மத ரீதியாக, சாதி ரீதியாக, மொழி ரீதியாக, இன ரீதியாக பாகுபாடுகளை உணவங்களிலோ. பொருட்கள் வழங்கும் இடங்களிலோ, பொது இடங்களிலோ மக்களை ஒதுக்கி வைப்பது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்துள்ளது.

    அவதூறு சட்டம்

    அவதூறு சட்டம்

    செக்சன் 499 ஐ காங்கிரஸ் கட்சி நீக்கும் என வாக்குறுதி அளித்துள்ளது. காலணி ஆதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட பேச்சுரிமைக்கு எதிரான இச்சட்டத்தை பயன்படுத்தி, அவதூறாக பேசுவதாக கூறி சட்டத்தை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள்.இந்த சட்டம் நீக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    காட்டாய கல்வி

    காட்டாய கல்வி

    ஒன்றாம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை கட்டாயம் இலவசக்கல்வி அளிப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு கட்டணங்கள் வசூலிப்பதை தடை செய்வோம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

    வன்முறை கும்பல்

    வன்முறை கும்பல்

    கும்பலாக சேர்ந்து ஒருவரை கொலை செய்வதை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள்களை ஆட்சிகு வந்த உடனேயே காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும் என வாக்குறுதி அளித்துள்ளது.

    உரிமை மருத்துவம்

    உரிமை மருத்துவம்

    மருத்துவ உரிமை சட்டம் இயற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ள காங்கிரஸ், 2023-24. ஆண்டுகளில் சுகாதரத்துக்கான தொகையாக ஜிபிடியில் 3 சதவீதம் ஒதுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த சட்டம் மூலம் அனைவரும் அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதார வசதி பெற முடியும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    English summary
    Kisan budget, farm loan waiver, Right to Healthcare — Congress manifesto promised so many issues
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X