கிசான் விகாஸ் பத்ரா.. சேமிப்பை இரட்டிப்பாக்கும் சூப்பர் திட்டம் KVP.. யோசிக்கவே முடியாத பலன் - சலுகை
சென்னை: சிறுசேமிப்பு திட்டங்களிலேயே வாடிக்கையாளர்களின் ஆதரவை பெற்ற கேவிபி எனப்படும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் பற்றின விவரங்கள் தெரியுமா?
ஏழை, நடுத்தர மக்கள், தங்களின் சேமிப்புகளை அதிகரிக்கவும், தனி நபர்களிடையே ஆரோக்கியமான முதலீட்டுப் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்.. இது கடந்த 1988-ல் சிறிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாக தொடங்கப்பட்டது.

வட்டி விகிதம்: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் பலரும் இணைய காரணம், விவசாயிகளின் நலத்திட்டங்களுக்காகவே இந்த திட்டம் பயன்பெறுகிறது.. அனைவருக்குமே இந்த திட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது..
அதிக வட்டி விகிதமும் பலரை ஈர்க்கிறது.. குறிப்பாக, இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளருக்கு 7.5 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருவது மிக மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வட்டி ஆண்டுக்கு ஒரு முறை முதலீட்டுடன் சேர்க்கப்படும்.
பலன்கள்: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் அபரிமிதமானவை.. குறிப்பாக, பங்கு சந்தையில் காணப்படும் ஏற்ற தாழ்வுகளால் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு எந்தவிதமான பாதிப்புடம் ஏற்படாது.. இந்த திட்டத்திற்கு அரசாங்க உத்தரவாதம் நிறையவே இருப்பதால், உங்களுக்கு போட்ட பணம் கிடைக்குமா இல்லையா என்ற அச்சம் தேவையில்லை.
ஒருவர் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும், அதற்கு மத்திய அரசின் முழுப்பாதுகாப்பு உள்ளது. இந்த திட்டத்தின் கணக்கு 115 மாதங்களில் முதிர்ச்சியடைவதால், நீங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்வரை உங்களுக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும்...
இந்த திட்டத்தில் ரூ.1,000, ரூ.5000, ரூ.10,000 மற்றும் முதலீட்டிற்கு ரூ.50,000 ஆகிய மதிப்புகளில் கிடைக்கிறது. அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. ரூ.50,000 மதிப்புள்ள மதிப்புகள் ஒரு நகரத்தின் தலைமை அஞ்சலகத்தில் மட்டுமே கிடைக்கும்..
தேவையான ஆவணங்கள் : கிசான் விகாஸ் பத்ரா கணக்கை துவங்க வேண்டுமானால், ஆதார் அட்டை, வயதுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ, கேவிபி விண்ணப்பப் படிவம் போன்றவை ஆவணங்களாக தேவைப்படும்.
திட்டத்தை துவங்க வேண்டுமானால் இதற்கு குறைந்தபட்சமாக ரூபாய் 1000 மட்டுமே போதும். அதிகபட்சமாக விருப்பப்பட்ட தொகையை நீங்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் சேர்ந்து 10 வருடங்களில், இரட்டிப்பு லாபத்துடன், முதலீடு செய்த தொகையை பெற முடியும்.. அதாவது, 9 வருடங்கள், 7 மாதங்கள் முதலீடு செய்த பிறகு, வெறும் 3 மாதங்களிலேயே அந்த இரட்டிப்பு லாபத்தை பெறலாம்.
எப்படி சேர்வது: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் இணைய விரும்புபவர்கள். அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்கு நேரில் அணுகி இணையலாம்.. சான்றிதழ் வடிவில், இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்...
யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். வயது வரம்பு எதுவுமே கிடையாது. ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு (நிபந்தனைக்குட்பட்டு), எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளவும் முடியும்.. பாஸ்புக் தொலைந்துவிட்டாலும்கூட, புது பாஸ் புத்தகம் பெற வேண்டுமானால், வெறும் ரூ.50 கட்டணம் செலுத்தினால் போதும்.. அதேபோல நாமினியை ரத்து செய்ய அல்லது மாற்ற வேண்டுமானாலும் ரூ.50 கட்டணம் உள்ளது
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications