கிழக்கு வாசல் சீரியலில் இருந்து நானாக விலகவில்லை.. நடந்தது இதுதான்! விளக்கம் கொடுத்த ரேஷ்மா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியல் அடுத்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீரியலில் இருந்து கதாநாயகி விலகி விட்டதாக செய்திகள் இணையத்தில் பரவி வந்தது. அதோடு ஒரு மாதமாக சீரியல் கதாநாயகியான ரேஷ்மா இந்த சீரியலில் வரவில்லை. இதனால் இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் அது குறித்து ரேஷ்மா விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் முதல் முறையாக விஜய் டிவியில் தயாரித்த சீரியலான "கிழக்கு வாசல்" சீரியல் 300 எபிசோடுகளோடு அடுத்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. இந்த சீரியல் தொடங்கி சில மாதங்களில் முடிவுக்கு வருவதற்கு காரணம் இந்த சீரியலின் கதாநாயகி சீரியலில் இருந்து விலகியது தான் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் அதுவெல்லாம் உண்மை காரணம் இல்லை என்று இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ரேஷ்மா தெரிவித்திருக்கிறார். நடிகை ரேஷ்மா ஜீ தமிழில் டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தாலும் "பூவே பூச்சூடவா" என்ற சீரியலின் மூலமாகத்தான் நடிகையாக மாறி இருந்தார். அந்த சீரியல் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
இந்த சீரியலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகர் தினேஷ் ரேஷ்மாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு இந்த சீரியலில் நடித்த நடிகர் மதன் பாண்டியனை ரேஷ்மா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழில் ஒரு சீரியலில் நடித்திருந்தனர். இப்படியான நிலையில் ரேஷ்மாவுக்கு கிழக்கு வாசல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியல் ரேடான் நிறுவனம் முதல்முறையாக விஜய் டிவிக்காக தயாரிக்கும் சீரியல் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதே நேரத்தில் நடிகர் விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரும் முதல் முறையாக சின்னத்திரையில் அறிமுகமான சீரியல் ஆகவும் இது இருந்தது. இதனால் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் இதற்கான கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படங்களை இந்த சீரியல் நடிகர்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரேஷ்மா தன்னுடைய instagram பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில், உங்கள் அன்புக்குரிய கிழக்கு வாசல் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது என்ற செய்தியை கனத்த இதயத்துடன் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.

எதிர்பாராத விதமாக எதிர்பாராத உடல்நல குறைபாட்டால் கடந்த மாத எபிசோடுகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இந்த அபாரமான பயணத்தில் ஒரு பகுதியாக இருந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். உங்கள் அசைக்க முடியாத ஆதரவும் அன்பும் எனக்கு உலகத்தையே உணர்த்தியது.
இந்த அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றதற்கு நான் உண்மையிலேயே பாக்கியவானாக இருக்கிறேன். நிகழ்ச்சியில் எனது நேரம் குறைக்கப்பட்டாலும் உருவான நினைவுகளும் நட்புகளும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என் வாழ்க்கையில் இந்த அழகான அத்தியாயத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நன்றி... அன்புடன் ரேணுவாக உங்கள் ரேஷ்மா... என்று அதில் பகிர்ந்து இருக்கிறார்.
இதன் மூலம் நான் சீரியலில் இருந்து விலகவில்லை உடல்நல குறைவினால் மட்டும்தான் சீரியலில் நான் வராமல் இருந்தேன் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் இன்று வெளியான ப்ரோமோவில் ரேணு வீடியோ கால் பண்ணி இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனால் சீரியல் முடியும் நேரத்தில் அனைவரிடமும் ரேணு வீடியோ காலில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போல தன்னுடைய காதலை தன் தங்கை அணுவிற்காக ரேணு விட்டுக் கொடுப்பது போன்று தான் சீரியல் முடிவடைய போகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications