பொதுச் செயலாளர் பதவி எனக்கு முள் கிரீடம்தான்.. கண் கலங்கியபடி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: முதுகுக்கு பின்னால் யார் யார் என்னென்ன பேசுகிறீர்கள் என்று தனக்குத் தெரியும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுக்குழுவில் சீறியிருக்கிறார்.
தன்னை பற்றி முதுகுக்கு பின்னால் இல்லாததும் பொல்லாததும் சிலர் பேசுவதை தெரிந்தும் தாம் பொறுமையாக எதுவும் தெரியாதது போலவே இருப்பதாக ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு காரணம் கட்சியை கரை சேர்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே தவிர வேறு இல்லை எனத் தெரிவித்தார். தன்னை பொறுத்தவரை பொதுச்செயலாளர் பதவியை முள் கிரீடமாகவே பார்க்கிறேன் என்றும் தனக்கு பொறுப்புகள் கூடியிருப்பதால் தாம் டென்ஷனாக இருக்கிறேன் எனவும் பேசினார்.

ஆனால் ஒன்றை மட்டும் தேமுதிகவினர் மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டு பேசிய பிரேமலதா, அரசியலில் தாம் எதற்கும் பயப்படமாட்டேன் என்றும் சவால் என்று வந்துவிட்டால் சவால் தான் சமரசமே கிடையாது எனவும் ஆவேசம் காட்டினார். தன்னுடன் கட்சிக்காக சேர்ந்து உழைக்க நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தன்னிடம் யார் வேண்டுமானாலும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
கட்சி தொடர்புடைய எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நிர்வாகிகள் தன்னிடம் நேரடியாக டிஸ்கஸ் நடத்தலாம் என்றும் இடையே குறுக்கீடே இருக்காது என்ற உறுதியையும் அளித்துள்ளார். இதன் மூலம் தேமுதிக தலைமைக்கழக நிர்வாகிகள் சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார். தொண்டனாக இருந்தாலும் சரி, நிர்வாகிகளாக இருந்தாலும் சரி நேரடியாக தன்னை சந்தித்து பேசலாம் என்றும் தேமுதிகவினரை முக்கிய பொறுப்புகளில் அமர வைக்கும் வரை தாம் ஓயமாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார்.
தேமுதிகவினர் உண்மையாக, ஒற்றுமையாக கட்சிக்கு உழைக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், தேமுதிகவை ஆட்சியில் அமர வைக்கும் நாள் தான் விஜயகாந்தின் லட்சியம் நிறைவேறிய நாளாக அமையும் எனப் பேசினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications