ரஞ்சனிக்கு ஆண் தொடர்புகள் அதிகம்.. மயக்கியே பணத்தை கறப்பார்.. ஸ்ரீகந்தன் மனைவி நான்சி பதிலடி!
இந்து மகாசபை பொதுச்செயலாளர் மீது மோசடி புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: "ஆண்களை மயக்கக் கூடியவர் ரஞ்சனி.. மயக்கியே பணத்தை கறக்க கூடியவர்.. பலருடன் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.. ஆனால் ஸ்ரீ ரொம்பவும் இரக்க சுபாவம் உடையவர்.. அதனால்தான் கோடி ரூபாய் வரை ரஞ்சனிக்கு செலவு செய்திருக்கிறார்.. இது வீண் பழி" என்று பாஜக பெண் பிரமுகர் ரஞ்சனி மீது கோடம்பாக்கம் ஸ்ரீயின் மனைவி நான்சி பரபரப்பு குற்றஞ்சாட்டி உள்ளார்.
அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ என்கிற ஸ்ரீகண்டன். இவர் மீது அந்த அமைப்பின் பொது செயலாளர் ரஞ்சனி பாலியல் தொல்லை கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 5 பிரிவுகளில் ஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
"2016 முதல்ல இந்து சபாவில் மகளிர் அணியில் இணைந்து வேலை பார்த்து வருகிறேன்.. ஸ்ரீ-க்கு இந்தி தெரியாது.. அதனால டெல்லி போகும்போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவார்.. என்னைப் பிடிச்சிருக்கிறதா சொன்னார்.. நான் முதலில் ஜோக்காக எடுத்துக்கொண்டேன். அப்புறம் என்னை கல்யாணம் செய்துக்கறதா சொன்னார்..

குற்றச்சாட்டு
இதற்கு பிறகு பொதுச்செயலாளராக தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்தார்.. எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கத் தொடங்கினார்.. மிரட்டல் விடுத்தார்" என்றெல்லாம் அடுக்கடுக்காக அந்த புகாரில் குற்றஞ்சாட்டி உள்ளார். போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததும், ஸ்ரீயை காணோம் என்கிறார்.. அதனால் அவரை தேடும் பணியும் நடக்கிறதாம்.

நெருக்கம்
இதனிடையே, ஸ்ரீ யின் மனைவி நான்ஸியும் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் வரை வந்துவிட்டார்.. அவர் தரப்பில் ஒரு புகாரை ரஞ்சனி மீது அளித்துள்ளார். இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நான்ஸி, "ரஞ்சனி ஆண்களை மயக்ககூடியவர்.. மயக்கியே பணத்தை கறக்க கூடியவர்.. பலருடன் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.. இங்க பாருங்க அந்த போட்டோக்கள் என்று காண்பித்தார்.. ஆனால் ஸ்ரீ ரொம்பவும் இரக்க சுபாவம் உடையவர்.. அதனால்தான் கோடி ரூபாய் வரை ரஞ்சனிக்கு செலவு செய்திருக்கிறார்.

கல்யாணம்
செப்டம்பர் மாதத்தில் இவருக்கு என் கணவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்கிறார்..அப்படியானால் இதற்கு பிறகு நடந்த அவர் சகோதர் கல்யாணத்துக்கு வருமாறு ஏன் ஸ்ரீயை கூப்பிட்டார்... அந்த கல்யாணத்துக்கு 20 லட்சம் ரூபாய் கடன் கேட்கவும் ஸ்ரீ-யும் தந்தார்.. அந்த பணத்தை இப்போ திரும்ப கேட்க போய்தான், இப்படி ஒரு பொய் புகார் என் கணவர் மீது தந்தள்ளார்.. அவர் நடவடிக்கை கூட சரியில்லை.. அதனால்தான் அவரை சபையில் இருந்து நீக்கினார்கள்.. ஆனால் அதற்கு பின்னரும், என் கணவரோடு தொடர்பில் இருந்தார்" என்றார்.

கொலை கேஸ்
இதனிடையே, நான்சியின் சகோதரரும் வக்கீலுமான சார்லஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, நிரஞ்சனி மீது பெங்களூருவில் கொலை கேஸ்கூட இருக்கு.. கணவர் வெங்கட் ராவை, சுபாஷ் என்பவரோடு சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுகொன்ற வழக்கில் 2வது குற்றவாளி இவர்தான்.. மாதவபுரா ஸ்டேஷனில் இது சம்பந்தமான வழக்கும் உள்ளது.. போலியான பிணை ஆணை வைத்து ஏமாற்றியுள்ளார்" என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications