ஊட்டி கோர்ட்டில் இன்று கொடநாடு கேஸ் விசாரணை! பரபரக்கும் நீலகிரி! மீண்டும் கொடநாடு பங்களாவில் ஆய்வு?
சென்னை: கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10வது குற்றவாளியான ஜித்தின் ஜாய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு உதகை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. அந்தவகையில், இன்றைய தினம் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளதாக தெரிகிறது. இது மிகுந்த எதிர்பார்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017ம் வருடம், ஏப்ரல் 23ம் தேதி கொலை, கொள்ளை நடந்தது..

ஊட்டி கோர்ட்டில் விசாரணை
இந்த குற்றங்கள் தொடர்பாக சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.. இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டில் கடந்த ஏழு வருடங்களாக நடந்து வருகிறது. ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையில் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் நடைபெற்ற எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2023ம் ஆண்டு குற்றவாளிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மறுபடியும் பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும்
மீண்டும் பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10வது குற்றவாளியான ஜித்தின் ஜாய் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் கடந்த 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்..
அதன்படியே கடந்த 14ம் தேதி, இந்த வழக்கின் விசாரணை ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது.. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் நேரில் ஆஜரானார்.
அதேபோல, அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோரும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசாரும் ஆஜராகினர்.
இன்று மீண்டும் விசாரணை
அப்போது அரசு தரப்பில் வாதிடும்போது, "இந்த வழக்கில் கூடுதல் சாட்சி விசாரணை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் கால அவகாசம் வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படியே இன்றைய தினம் மீண்டும் இவ்வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.. இது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications