கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு:எடப்பாடியின் வலது கரம் சேலம் இளங்கோவனை விசாரணைக்கு அழைக்க போலீஸ் முடிவு?
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமான சேலம் இளங்கோவனை விசாரணைக்கு அழைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் மறு விசாரணை படுமும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. கோடநாடு வழக்கில் மர்ம முடிச்சுகளாக இருக்கும் மரணங்கள் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் போக்குகள் பொதுவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் இவ்வழக்கின் ஒவ்வொரு நகர்வும் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக இருக்கிறது.

மறுவிசாரணை தீவிரம்
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறதோ அத்தனை பேரையுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்து வருகிறது போலீஸ். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் மர்ம மரணம்தான் மிக முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. கனகராஜூடன் கடைசிவரை போனில் பேசிக் கொண்டிருந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் ஆகியோரும் விசாரணை வளையத்தில் உள்ளனர்.

சேலத்தில் சயான்
மேலும் கோடநாடு பகுதியை விட்டு வெளியேறிய சஜீவன் மற்றும் சயான் இருவரும் முதலில் சென்றது கோவைக்கு... சயானை கோவைக்கு அனுப்பி விட்டு, சஜீவன் மட்டும் சேலம் சென்றுள்ளார். அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமுமாக இருக்கும் சேலம் கூட்டுறவு இளங்கோவனின் நட்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞரை சந்தித்து பேசியிருக்கிறார். அவரிடம் சில முக்கிய ஆவணங்களை சஜீவன் ஒப்படைத்திருக்கிறார்.

அடுத்தது சேலம் இளங்கோவன்?
சஜீவனுடனான சந்திப்புக்குப் பின்னர் அந்த வழக்கறிஞர் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொண்டு போனது சேலம் இளங்கோவனிடம்... இவ்வளவும் போலீசார் நடத்திய மறு விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த கட்ட விசாரணை சேலம் இளங்கோவன்தான் எனவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்?
சேலம் இளங்கோவனிடம் விசாரணை நடத்தப்பட்டால் அதற்கு அடுத்ததாக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். இதனால் அதிமுக தரப்பு ரொம்பவே ஆடிப் போயிருக்கிறது. கனகராஜின் உறவினர்கள், கோடநாடு சிசிடிவி ஆபரேட்டர் தினேஷின் பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் கிளிப்பிள்ளை போல சொல்லிக் கொடுத்ததையே திரும்ப திரும்ப ஊடகங்களில் சொல்லி வருகின்றனர். போலீசிடமும் இதனையே தெரிவித்தோம் என்கின்றனர். மேலோட்டமாக இது அதிமுக தரப்புக்கு நம்பிக்கையை தந்தாலும் சேலம் இளங்கோவன் சொல்லப் போகும் தகவல்கள்தான் முக்கியமானவை என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications