கொடநாடு வழக்கு: எடப்பாடியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், ஜிதின் ஜாய், ஜம்ஷேர் அலி, மனோஜ் சாமி உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி போலீஸார் 250-க்கும் மேற்பட்டவர்களை நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வந்தவர் நடராஜன். இந்த கொலை, கொள்ளை தொடர்பாக அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதால் கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடராஜனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நடராஜனிடம் 8 மணி நேரம் போலீஸார் விசாரணை செய்சதனர். போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவர் அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணைக்கு அழைத்தால் வராமல் ஆஜராக வேண்டும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கொலை கொள்ளை சம்பவத்தின்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 11 ஆம் தேதியன்று வீரபெருமாள் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தின்போது பாதுகாப்புப் பிரிவின் ஆய்வாளராக இருந்தவர் கனகராஜ். இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது மற்றும் இதுவரை தனது சொல்போனை ஒப்படைக்காதது குறித்தும் வீரபெருமாளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications