8 மேட்டர்களும், எக்கச்சக்க ஓட்டைகளும்.. சிக்கும் எடப்பாடி பழனிசாமி?.. கொடநாடு வழக்கில் என்ன மர்மம்?
கொடநாடு விவகாரத்தில் அதிமுகவுக்கு சிக்கல் கூடி உள்ளது
சென்னை: கொடநாடு விவகாரங்களின் விசாரணை ஓட்டைகள் என்னென்ன? இப்போது இந்த வழக்கின் போக்கு எப்படி உள்ளது? அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எங்கே சிக்குகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு நிறைந்த சில சந்தேகங்களும் ஏற்பட்டுள்ளன.
முதலாவதாக கொடநாடு எஸ்டேட் பங்களாவின் முக்கியத்துவம் என்ன என்று பார்ப்போம்.. இந்த பங்களா, ஜெயலலிதா ஓய்வு எடுக்கும் இடம் மட்டுமல்ல..
அதிமுகவின் ஒரு ஆவண காப்பகமாக, தலைமைச் செயலகமாகவே விளங்கியது என்கிறார்கள்.. அதாவது அதிமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் பற்றி உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சேகரிக்கப்படும் தகவல்களை, அந்த பங்களாவில்தான் ரகசியமாக வைப்பார்களாம்..

டீலிங்
அதிமுகவில் முக்கிய புள்ளிகளாக வலம் வருபவர்கள் செய்யும் அண்டர் கிரவுண்ட் டீலிங் போன்றவைகளும் டாக்குமெண்ட்களாக, ஹார்ட் டிஸ்க்குகளாக அங்கு பாதுகாத்து வந்துள்ளனர்.. யார் மீது எந்த புகார்கள், பிரச்சனைகள் வருகிறதோ, அப்போது இந்த தகவல்கள்தான் உதவியாகவும் இருந்து வந்துள்ளது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான் கொடநாடு பங்களா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் பங்குதாரர்களாக உள்ளனர்... சென்னையில் பேசப்படாத எத்தனையோ அரசியல் விவகாரங்களை இந்த பங்களாவில்தான் பேசுவார்களாம். அது சிசிடிவியில் பதிவும் ஆகியுள்ளது என்கிறார்கள்.

பாதுகாப்பு
இரண்டாவதாக, இந்த பங்களாவின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.. 2017-ல் ஏப்ரல் மாதம் 23-ம்தேதி இந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.. கோடநாடு சாதாரணமாக நுழையும் பகுதியல்ல.. தடையில்லா மின்சாரத்துக்கு பெரிய அமைப்பே இங்குள்ளது.. மொத்த நீலகிரி மாவட்டத்துக்கு கரண்ட் இல்லை என்றாலும், இந்த கொடநாடு பகுதிக்கு மட்டும் கரண்ட் சப்ளை இருந்து கொண்டே இருக்கும்.. ஆனால், அன்றைய தினம் கரண்ட் கட் ஆகி உள்ளது.. அதேபோல, சிசிடிவி கேமராக்களும் அணைக்கப்பட்டிருந்தன.. இந்த அனைத்து சிசிடிவி கேமராக்களின் ஒரே ஆபரேட்டர்தான் தினேஷ் என்பவர்.. அவர் எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பவர்.. அன்றைய தினம் மட்டும் சிசிடிவி அணைக்கப்பட்டிருந்தது.. வழி நெடுகிலும் உள்ள செக் போஸ்டுகளும் அகற்றப்பட்டிருந்தன.

மர்மம்
மூன்றாவதாக, அடுத்தடுத்த மரணங்கள் ஒரே சமயத்தில் நடந்துள்ளன.. பெரும்பாலும் விபத்து என்றே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.. சிசிடிவி தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... இவர் தூக்கில் தொங்கியது அவரது லுங்கியே இல்லை என்கிறார்கள் குடும்பத்தினர்.. அப்படி ஒரு லுங்கி வீட்டிலேயே கிடையாது என்று கூறுகிறார்கள். முக்கிய சாட்சியான கிருஷ்ணா பகதூர் இருக்கும் இடமும் தற்போது வரையில் தெரியவில்லை..

நகை, பணம்
நான்காவதாக, ஆவணங்களை எடுத்து வர சென்றதாக சொல்லப்படுகிறது.. பணம் நகைக்காக திருட்டு என்கிறார்கள், இதில் எதை திருட சென்றார்கள் என்று உறுதியாக தெரியவில்லை.. ஆனால், அந்த பங்களாவில் எங்கெங்கே ஜன்னல்கள் இருக்கின்றன, எந்த ஜன்னல்களில் இரும்பு தடுப்பு இருக்காது என்பதை கனகராஜ்தான் சொன்னாராம்... பங்களாவில் இருக்கும் 28 சிசிடிவி கேமராக்களும் இயங்காது சொன்னதும் கனகராஜ்தானாம்.. அப்படியானால் தினேஷ் ஏன் தற்கொலை செய்தார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

மாஜி அமைச்சர்கள்
ஐந்தாவதாக, இந்த மொத்த மர்ம மரணங்களுக்கு பின்னணியில் அதிமுகவின் மேலிடம் சயான், மனோஜின் வாக்குமூலங்கள் உள்ளன.. எடப்பாடி பழனிசாமி தவிர, அவருக்கு நெருக்கமாக முன்னாள் அமைச்சர்களின் பெயர்களின் இந்த சம்பவம் தொடர்பாக அடிபடுவதாக கூறப்படுகிறது... தங்களது தொடர்பான ஆவணங்களையும், மற்ற விவரங்களையும் எடுக்கவே இந்த சம்பவத்தை அவர்கள் திட்டமிட்டு அரங்கேற்றியதாகவும் சொல்கிறார்கள்.

வாக்குமூலம்
ஆறாவதாக, எடப்பாடி பழனிசாமியின் பெயர் வலுவாக அடிபடுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.. சயான் தந்த வாக்குமூலத்தில் எடப்பாடி பெயரை அழுத்தி சொல்லி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை சயான் பொய் சொல்லி இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், கொலை, சில சம்பவங்கள் சந்தேகத்தை கிளப்புகிறது.. கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிதான்.. ஆனால், நடந்த சம்பவம் குறித்து சங்ககிரி டிவிஷனில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்குதான் முதலில் தெரியவந்துள்ளது.. இவர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தாராம்.. அதாவது, ஆத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவதற்கு முன்பேயே, சங்ககிரி போலீசுக்கு தகவல் எப்படி தெரிந்தது என்பதுதான் கேள்வியே.

பொம்மை
ஏழாவதாக, முதலமைச்சராக இருந்தவரின் பங்களாவில் வெறும் கடிகாரத்தையும் பொம்மையையும் திருட யாரும் நுழைந்திருக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமிக்கே நன்றாக தெரிந்திருந்தும் விசாரணையை முடக்கி விடாதது ஏன் என்று தெரியவில்லை.. மாத்யூ, சயன், மனோஜ் இவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியும்கூட, எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் சொல்லவில்லை.. கொலை கொள்ளை நடந்தவுடன் முதல்வர் முந்திக்கொண்டு ஒன்றும் திருடு போகவில்லை சில வாட்ச்களும் , ஒரு பொம்மையும் திருடு போனது என்று மட்டுமே அறிவித்தார். ஆனால், தான் ஆட்சியில் இருந்தவரை, இந்த கொலை, கொள்ளை சம்பந்தமாக வழக்கை சரியாக முடிக்கவே இல்லை என்பதுதான் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

டென்ஷன்
ஏழாவதாக, முதலமைச்சராக இருந்தவரின் பங்களாவில் வெறும் கடிகாரத்தையும் பொம்மையையும் திருட யாரும் நுழைந்திருக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமிக்கே நன்றாக தெரிந்திருந்தும் விசாரணையை முடுக்கி விடாதது ஏன் என்று தெரியவில்லை.. மாத்யூ, சயன், மனோஜ் இவர்கள் அடுத்தடுத்த பேட்டிகளில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியும்கூட, எடப்பாடி பழனிசாமி நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கம் சொல்லவில்லை.. கொலை கொள்ளை நடந்தவுடன் முதல்வர் முந்திக்கொண்டு ஒன்றும் திருடு போகவில்லை சில வாட்ச்களும் , ஒரு பொம்மையும் திருடு போனது என்று மட்டுமே அறிவித்தார். ஆனால், தான் ஆட்சியில் இருந்தவரை, இந்த கொலை, கொள்ளை சம்பந்தமாக வழக்கை சரியாக முடிக்கவே இல்லை என்பதுதான் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கட்டாயம்
தன்மீது திட்டமிட்டு திமுக வீண் பழியை சுமத்துகிறது என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படியானால், இவர் முதல்வராக இருந்தபோதே, அதுவும் தன்னுடைய பெயரை சயானும் மனோஜும் வாக்குமூலத்தில் தெரிவித்தவுடனேயே, சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தால், இந்த அளவுக்கு சந்தேகத்திற்கு ஆளாகி இருக்க மாட்டாரே.. ஏன் சிபிஐ உதவியை நாடவில்லை? எடப்பாடி பழனிசாமியின் பதற்றமும், பீதியும் நிறைந்த அவரது செயல்பாடுகள்தான், இந்த சம்பவத்தின் மிக முக்கிய சந்தேகத்தை அவர்மீது கிளப்பி உள்ளன என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுபோன்ற பல சந்தேகங்களின் முடிச்சுகளை அதிமுக மேலிடம் அவிழ்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளது..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications