ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்?
சென்னை: வருமானக் கணக்கை குறைத்து காட்டியதால் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு, கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட். இது ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. அவரது மறைவுக்கு பிறகு சசிகலா நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. கர்சன் எஸ்டேட்டும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதுதான்.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் தேதி கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக விசாரணை சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில் தனிப்படை போலீஸார் முக்கிய ஆதாரங்களை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.

தேயிலை
இந்த நிலையில் இந்த எஸ்டேட்டில் தயாரிக்கப்படும் தேயிலைகள் உள்நாடு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு 800-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மாதந்தோறும் 5 அல்லது 6 ஆம் தேதிகளில் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.

முடக்கம்
ஆனால் இதுவரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில் கொடநாடு எஸ்டேட், கர்சன் எஸ்டேட்டின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது வருமான கணக்கை குறைத்துக் காட்டியதால் வருமான வரித் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

எந்த வங்கியில் கணக்கு?
இந்த எஸ்டேட்டுகளுக்கு கோத்தகிரி ஈளாடாவில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டிருந்த இரு எஸ்டேட் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வங்கிக் கணக்குகளை மேலாளர் நடராஜன்தான் நிர்வகித்து வருகிறார். அவர் ஏற்கெனவே கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

வங்கிக் கணக்குகள் முடக்கம்
இந்த நிலையில் வருமானத்திற்கு குறைவாக கணக்குகளை காட்டியதால் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் ஊதியமின்றி தவித்து வருகிறார்கள். ஏற்கெனவே இதே போல் வருமானத்திற்கு குறைவாக கணக்கை காட்டியதால் வருமான வரித் துறையினரால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அப்போது கணக்கை காட்டியதால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. தற்போதும் அதே போல் கணக்குகளை சரி வர காட்டினால்தான் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications