எடப்பாடியை நோக்கி திரும்பிய கணைகள்.. 5 பக்கத்திலிருந்தும் சிக்கல்.. கோடநாட்டில் ஸ்டாலின் எடுத்த மூவ்
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அதிமுக தரப்பிற்கு சிக்கல் ஏற்படும் அறிகுறிகள் தோன்றியுள்ளன. முக்கியமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 5 முக்கியமான விஷயங்கள் திரும்பி உள்ளன. இதனால் இனி இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
Recommended Video
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் போலீஸ் மற்றும் நீதிமன்ற விசாரணைகள், ஏகப்பட்ட வாக்குமூலங்கள், புதிய ஆதாரங்கள் என்று பல விஷயங்கள் இந்த வழக்கில் பூதம் போல வெளியே வந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது.
ஜெயலலிதாவின் கோட்டை என்று கருதப்பட்ட இந்த பங்களா அவரின் மறைவிற்கு பின் பாதுகாப்பு இன்றி கைவிடப்பட்டது. இந்தியாவில் சிசிடிவி அறிமுகப்படுத்தப்பட்ட போதே முதல் ஆளாக இங்கு ஜெயலலிதா சிசிடிவி கேமராவை பொருத்தினார். அந்த அளவிற்கு இந்த வீட்டின் பாதுகாப்பில் அவர் கவனம் செலுத்தினார்.

மரணம்
ஆனால் அவரின் மறைவிற்கு பின் இது வீட்டின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இரண்டு காவலர்கள் மட்டுமே இங்கு காவல் காக்கும் அவலம் ஏற்பட்டது. 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இங்கு இருக்கும் சில முக்கியமான ஆவணங்களை திருட வந்த கும்பல் அங்கு காவலரையும் கொன்றுவிட்டு தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் அவரின் மறைவிற்கு பின் இது வீட்டின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இரண்டு காவலர்கள் மட்டுமே இங்கு காவல் காக்கும் அவலம் ஏற்பட்டது. 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொடூரமான சம்பவத்தில் பாதுகாவலர் ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இங்கு இருக்கும் சில முக்கியமான ஆவணங்களை திருட வந்த கும்பல் அங்கு காவலரையும் கொன்றுவிட்டு தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

பலி
இதில் கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர். இவர் கொள்ளை சம்பவத்திற்கு பின் விபத்து ஒன்றில் பலியாகிவிட்டார். இவரின் மரணத்தை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் வெவ்வேறு தருணங்களில் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். அதோடு கோடநாடு எஸ்டேட்டில் திடீரென திருட்டு நடக்கும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது தொடங்கி பல்வேறு விஷயங்கள் இந்த வழக்கில் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு போலீசார் இதை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் மொத்தம் 5 விஷயங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி உள்ளது. ஆம் மொத்தம் 5 விஷயங்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சிக்கலாக முடியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேல் விசாரணை
முதல் விஷயம், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த தமிழ்நாடு போலீசுக்கு கிடைத்து இருக்கும் கிரீன் சிக்னல். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. வழக்கில் மேல் விசாரணை நடத்த தடை கிடையாது என்று சென்னை யர் நீதிமன்றம் உறுதி அளித்து உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மேல் விசாரணை நடத்த கூடாது.. இதில் ஏற்கனவே விசாரணைகள் முடிந்துவிட்டது என்று கூறிய நிலையில், இப்போது மேல் விசாரணைக்கு அனுமதி கிடைத்து உள்ளது அவருக்கு எதிராக திரும்பி உள்ளது. தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்காக வைத்த வாதங்கள் மேல்விசாரணையை சாத்தியப்படுத்தி உள்ளது.

சயான்
இது போக இன்னொரு முக்கியமான விஷயமாக, இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. வாக்குமூலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகும் செய்திகள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

5 தனிப்படை
இது போக இந்த வழக்கை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பது தெளிவாக தெரிகிறது. அதனால்தான் ஒரே வழக்கிற்கு, அதிலும் பாதி விசாரிக்கப்பட்ட வழக்கிற்கு 5 தனிப்படைகளை தமிழ்நாடு அரசு அமைத்து இருக்கிறது. இந்த வழக்கில் எப்படியாவது மர்மங்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். தற்போது 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் வழக்கை ஒவ்வொரு தனிப்படையும் தனி தனி கோணங்களில் விசாரிக்கும். இதனால் வழக்கில் பல புதிய திருப்பங்கள் வரும் நாட்களில் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு வழக்கு
இது போக இன்னொரு பக்கம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடுத்துள்ள இந்த வழக்கில் விரைவில் முக்கிய உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எடப்பாடியை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

கடைசி சிக்கல்
ஒருவேளை அதற்கான அனுமதி கிடைத்தால் எடப்பாடி தரப்பிற்கு அது சிக்கலாகும். இதெல்லாம் போக தற்போது கோடநாடு வழக்கில் பல புதிய ஆதாரங்கள் வெளியே வர தொடங்கி உள்ளது. கோடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் கணினி ஊழியர் தினேஷ் குமாரின் மர்ம மரணம், இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் மர்ம மரணத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை, சில புதிய வாக்குமூலங்கள் மூலம் இந்த வழக்கில் மேலும் எடப்பாடி பழனிசாமி அல்லது அதிமுக தரப்பிற்கு எதிராக கணைகள் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications