கொளத்தூரில் ஸ்டாலின் ஷாக் தோல்வி! யார் அந்த கறுப்பு ஆடு? ரகசிய டீம் அமைத்து துர்கா புலன் விசாரணை
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியுற்றதற்கான காரணங்களை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்டறிந்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க-வின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் சந்தித்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் பணியைத் தலைவரின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று தொடங்கியுள்ளார்.
வெற்றிப் பயணத்திற்கு ஏற்பட்ட முற்றுப்புள்ளி
வரலாறு: கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை வென்றவர் ஸ்டாலின். குறிப்பாக 2021-ல் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டுப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வளர்ச்சித் திட்டங்கள்: முதலமைச்சரான பிறகு, இத்தொகுதிக்கு எனச் சிறப்புப் பள்ளிகள், மருத்துவமனைகள், நவீன நூலகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பூங்காக்கள் எனப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். மாதம் இருமுறை மக்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தோல்வி: இத்தனை செல்வாக்கு இருந்தும், நான்காவது முறையாகப் போட்டியிட்டபோது தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் எதிர்பாராத விதமாகத் தோல்வியடைந்தார்.
துர்கா ஸ்டாலினின் ரகசிய விசாரணை
தோல்வியால் சோர்ந்து போயிருக்கும் தி.மு.க.வினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தவும், உண்மையை அறியவும் துர்கா ஸ்டாலின் தனது பழைய தொடர்புகளைப் பயன்படுத்த உள்ளார். முன்பு பொங்கல் மற்றும் திருமண விழாக்களில் தான் சந்தித்த மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் சமூக நல ஆர்வலர்களிடம் (சுமார் 20-க்கும் மேற்பட்டோர்) தலா 10 நிமிடங்களுக்கு மேல் ரகசியமாகப் பேசினார்.
விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
இந்த உரையாடல்களின் போது பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள்.
புறக்கணிக்கப்பட்ட மனுக்கள்: "தொகுதிப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் ஸ்டாலின் வீட்டிற்கு அனுப்பிய கடிதங்கள் படிக்கப்படாமலே குப்பையில் வீசப்பட்டன. அவற்றை அப்போதே கவனித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது" எனப் பெண்கள் ஆதங்கப்பட்டனர்.
வெளிப்படையான ஏமாற்று வேலை: கட்சி நிகழ்ச்சிகளில் தொகுதி மக்களைக் காட்டாமல், வெளியூர்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து கூட்டத்தைக் காட்டி ஸ்டாலினை நிர்வாகிகள் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர்.
நிர்வாகக் குழப்பம்: தொகுதியில் உண்மையாகவும், தன்னார்வத்துடனும் பணியாற்ற முன்வந்த நிர்வாகிகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணியில் தொய்வு: "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதிக்காக 10-க்கும் மேற்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிரப் பணியாற்றியது போல, கொளத்தூரில் எந்தப் பணியும் நடக்கவில்லை" என்பதே தோல்விக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்:
துர்கா ஸ்டாலின் நடத்திய இந்தத் தீவிர விசாரணையின் முடிவுகள் கட்சித் தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், கொளத்தூர் பகுதியில் மெத்தனமாகச் செயல்பட்ட மற்றும் தவறான தகவல்களை வழங்கிய தி.மு.க. நிர்வாகிகள் பலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொளத்தூர் தொகுதியில் எஸ்ஐஆர் மூலம் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் சேகர்பாபு பேச்சை கேட்டு அந்த கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை போட்டியிட வைத்து தோற்கடிக்கப்பட்டார் என பலர் விமர்சித்து வரும் நிலையில் துர்கா ஸ்டாலின் புலன் விசாரணையை தொடங்கியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications