விபச்சாரம்.. யார் அந்த "விஐபி".. வடமாநில கும்பலுக்கு கடலூரில் என்ன வேலை?.. ரவுண்டப் செய்த போலீஸ்!

கடலூரில் பாலியல் தொழில் செய்த கொல்கத்தா கும்பல் கைதானது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊர் விட்டு ஊர் மட்டுமல்ல, மாநிலம் விட்டு மாநிலம் வந்து விபச்சாரம் செய்துள்ளது கொல்கத்தா கும்பல் ஒன்று..!

கடலூரை அடுத்துள்ளது பெரிய கங்கணாங்குப்பம் ஊராட்சி... இங்குள்ள வீட்டில் ஒரு கும்பல் தங்கியிருப்பதாகவும், அவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள் என்றும் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது..

இதையடுத்து போலீசாரும், தனி டீமை அமைத்து, அந்த குறிப்பிட்ட வீட்டை ரகசியமாக சிறிது நேரம் கண்காணித்தனர்.. அந்த வீடு சற்று பெரிதாகவும், ஆடம்பரமாகவும் காணப்பட்டது.

ஆண்கள்

ஆண்கள்

அப்போது போலீசாருக்கும் அதுபோன்றே சந்தேகம் எழுந்தது.. இதையடுத்து அதிரடியாக அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.. வீட்டிற்குள் நுழைந்து பார்த்தால், 3 ஆண்கள், 2 பெண்கள் இருந்தனர்.. போலீசாரை பார்த்ததுமே அதிர்ச்சியானார்கள்.. இதைவிட ஆச்சரியம், அவர்களுடன் ஒரு சிறுவனும் வீட்டிற்குள் இருந்துள்ளான்...!

 பாலியல் தொழில்

பாலியல் தொழில்

பிறகு அவர்களிடம் விசாரணை நடத்தியபோதுதான் தெரிந்தது இவர்கள் எல்லாம் வடமாநிலம்.. அதாவது வங்கதேசத்தினராம்.. கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.. மொத்த பேரும் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர்.. இதற்காகவே, பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, வீட்டிற்குள் சோதனையை மேற்கொண்டபோது, பல போலியான ஆவணங்கள் சிக்கின.

கும்பல்

கும்பல்

இவர்கள் வெளிநாட்டினருடன் அடிக்கடி தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என்பதும் கூடுதலாக தெரிய வந்தது. பிறகு, இந்த கும்பலை அழைத்து சென்று போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் உதவி செய்ய ஒரு புரோக்கர் இருக்கிறாராம்.. அவர்தான் இவர்களுக்கு வீடு எடுத்து தந்தவரும்கூட.. அவர் இப்போது எஸ்கேப் ஆகி உள்ளதால், தேடும் பணி நடக்கிறது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து, அந்த வீட்டை சுற்றி இருக்கும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தார்கள்.. கடந்த சில மாதங்களாகவே இங்கு இவர்கள் தங்கியிருக்கிறார்களாம்.. கொல்கத்தாவில் இருந்து வந்துள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால், யாருடனும் பேசுவதில்லையாம்.. கதவை திறந்து வீட்டை விட்டு வெளியேவும் வருவதில்லையாம்.

 கொல்கத்தா

கொல்கத்தா

இதனால், இந்த வீட்டை சுற்றியுள்ள நான்கைந்து குடும்பங்கள் தவிர, அந்த தெருவில் இப்படி வீட்டில் ஆட்கள் இருக்கிறார்கள் என்ற விஷயமே தெரிய காணோம்.. பாலியல் தொழிலை கடலூரில் வந்து வங்கதேசத்தினர் ஏன் செய்தார்கள்? இங்கு வந்து ஏன் தங்கியிருக்க வேண்டும்? இதற்கு பின்னணியில் யாரோ ஒரு விஐபி-யின் உதவி இல்லாமல் இந்த துணிச்சல் வராது என்கின்றனர். நாஜ்மூர் ஷித்தர், ஷக்தர் முல்லா, பாபுஷேக் ஆகியோர்தான் கைதான அந்த 3 இளைஞர்கள்..

ஏஜென்ட்டுகள்

ஏஜென்ட்டுகள்

இதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு அடிக்கடி போய் வருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.. அதற்கு பிறகுதான் சந்தேகம் வலுத்துள்ளது.. இந்த 3 ஏஜென்டுகளும், அந்த 2 பெண்களை அழைத்து புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பாலியல் தொழிலுக்காக அழைத்து செல்வார்களாம். இப்போதைக்கு 5 பேரும் கைதாகி உள்ளனர். ஆனால், அந்த வீட்டில் சிறுவன் யார் என்று தெரியவில்லை.. அவனையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+