தேங்காய் விலை வீழ்ச்சி! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தர வேண்டும்! கொங்கு ஈஸ்வரன் புது ஐடியா!
சென்னை: தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால், தென்னை விவசாயிகள் செய்கின்ற முதலீட்டிற்கு கூட விலை கட்டுப்படி ஆவதில்லை என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.
தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வழிவகை செய்ய வேண்டும் என அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

தேங்காய் விலை
எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. தென்னை விவசாயிகள் விவசாயத்திற்கு செய்கின்ற முதலீட்டிற்கு கூட கட்டுப்படி ஆவதில்லை. 18 ரூபாய் இருந்த தேங்காய் தற்போது 8 ரூபாய்க்கு விற்கிறது. கிலோவிற்கு 105.90 ரூபாய் கொப்பரைக்கு ஆதார விலையாக அரசு நிர்ணயித்து இருந்தாலும் வெளிச்சந்தையில் 85 ரூபாய்க்கு தான் விற்கிறார்கள்.

கொப்பரை கொள்முதல்
கொப்பரை கொள்முதலுக்கு அரசு விதித்திருக்கின்ற கட்டுப்பாடுகள் சிறு விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லை. அதனால் சிறு விவசாயிகள் 85 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறார்கள். தென்னை விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து அமரவைத்து கருத்துகளை கேட்டு விலை வீழ்ச்சியிலிருந்து ஏழை விவசாயிகளை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

புது யோசனை
கீழ்கண்ட நடவடிக்கைகள் மூலம் தென்னை விவசாயிகளை பாதுகாக்க முடியும். 1) ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வழிவகை செய்ய வேண்டும். 2) தேங்காய் கீற்றுகளை சத்துணவுடன் கொடுக்கப்பட வேண்டும். 3) கொப்பரை கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்த வேண்டும். 4) குறைந்தபட்ச ஆதரவு விலையை தேங்காய்க்கு எடை அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தென்னை நல வாரியம்
5) சுற்றுப்புறச்சூழல் விதிமுறைகளின் நடைமுறையால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 6) பாமாயில் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 7) தென்னை நல வாரியத்தை தாமதமில்லாமல் அமைக்க வேண்டும். மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏழை விவசாயிகளை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications