தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை விஸ்வரூபம்- தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்- கொமமு முடிவு!
சென்னை: தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப் போவதாக கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட தனி ஆணையம் அமைத்து,மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். அதனடிப்படையில் தமிழகத்தில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிப்பதோடு, அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சட்டப்பூர்வமாக நிலைபெற செய்ய முடியும்.

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: இந்தியாவில் முதன் முதலில் பீகார் மாநில அரசு சாதி வாரிமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்து உள்ளது. இந்தியாவிலேயே சமூகநீதிக்கு முன் மாதிரி மாநிலமாக இருந்த வந்த தமிழ்நாடு இப்போது சமூக நீதிக்கான முன்னெடுப்பை மற்ற மாநிலங்கள் கையிலெடுத்த நிலையில் தமிழக அரசு காலம் தாழ்த்துவது சமூக நீதிக்கு எதிரானது.
பகிர்ந்தளிப்பதுதான் சமூக நீதி: ஆண்டாண்டு காலமாகப் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிபடுத்துவதே உண்மையான சமூக நீதியாகும். இத்தகைய இட ஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, சாதி வாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்வதோடு, அனைத்து தமிழ்ச்சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மாவட்டங்களில் போராட்டம்: சாதி வாரிக்கணக்கெடுப்பின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பது தான் கொங்கு மக்கள் முன்னணியின் நிலைப்பாடு, அதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். கடந்த தேர்தலில் திமுகவும் அதனை தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அவசியத்தை அரசுக்கு அறிய செய்ய கொங்கு மக்கள் முண்ணனி சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்து கொள்கிறோம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications