விடுதலை சிறுத்தைகள் கட்சியை இரண்டாக உடைக்கப்போகிறார் ஆதவ் அர்ஜுனா.. கொமதேக ஈஸ்வரன் டவுட்!
சென்னை: ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இரண்டாக உடைத்து விடுவாரோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாவட்ட பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கொமதேக ஈஸ்வரன், அரசியல் களத்தை திராவிட அரசியல், தமிழ் தேசிய அரசியல், ஆன்மிக அரசியல் என பிரித்து கூறுகின்றனர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அரசியல் ஆக்கப்பூர்வமான அரசியல். அனைத்து நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் இந்த ஆக்கப்பூர்வமான அரசியல். தமிழக அரசு பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும். சொத்து வரியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அதேபோல, கோவை மாநகராட்சி பெரிய மாநகராட்சியாக விரிவடைந்து வருவதால் அதனை இரண்டாகப் பிரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலை நல்லூறு திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நயன்தாரா, தனுஷ், ஏஆர் ரகுமான் அவரது மனைவிக்கு நடக்கும் சண்டைகள் தான் நாட்டில் பெரிய பிரச்சனையா. அதனை தேவையில்லாமல் நாம் விவாதித்து கொண்டிருக்கிறோம். தூய்மையான அரசியல் எங்களிடம் உள்ளது என்றார்.
அதைத்டொர்ந்து, ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெயை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து நாம் தமிழர் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்றுதான் சீமான் ரஜினி சந்திப்பு நிகழ்வு. திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை தங்களுக்கு இல்லை.
என்னைப் பொருத்தவரை கொங்கு மண்டலத்துக்கான திட்டங்கள் வேண்டும். எனது ஆட்சியில் பங்கு என்ற கோஷம் என்பது கேட்கின்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சித் திட்டங்களை தாமதப்படுத்தக் கூடாது. என்னைப் பொருத்தவரை இதை தான் ஆட்சி அதிகாரத்தில் பங்காக நான் பார்க்கிறேன்.
ஆட்சியிலே பங்கு அதிகாரத்திலே பங்கு என்பது தேர்தலுக்குப் பிறகு இருக்கிற சூழ்நிலையைப் பொறுத்து தானாக நடக்கும். இப்போது அதைப் பற்றி பேசுவதெல்லாம் பத்திரிக்கையின் கவனத்தை தன் பக்கம் ஈர்ப்பதற்காகவும், தான் எப்போதும் தலைப்புச் செய்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கின்ற நடவடிக்கை இது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜூனாவின் குரல்தான் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை துவக்கியிருக்கிறது. ஆதவ் அர்ஜூனா தனித்தன்மை வாய்ந்தவர, திறமையானவர், எல்லா வசதிகளையும் படைத்தவர். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர் இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இரண்டாக உடைத்து விடுவாரோ என்று கூட எனக்கு சந்தேகம் இருக்கிறது. எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications