பெத்த அம்மாவே என்ன நிர்வாணமா ஆட சொன்னாங்க.. கதறிய மகள் மன்னிப்பு கேட்க முடிவு
பெண் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்த அவரது மகள் மன்னிப்பு கேட்க முடிவு செய்துள்ளார்
Recommended Video
சென்னை: "பெத்த அம்மாவே என்ன நிர்வாணமா ஆட சொன்னாங்க.. என்னை பார்-ல டான்ஸ் ஆட வெச்சி சம்பாதிச்சாங்க.. கொடுமைப்படுத்தறாங்க.. பயமா இருக்கு.. என் உயிரை காப்பாத்துங்க" என்று கதறிய பெண் இன்ஸ்பெக்டரின் மகள், நாளை போலீசாரிடம் இது சம்பந்தமாக மன்னிப்பு கேட்க போவதாக அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களையும் சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார்.
கோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. பெற்ற மகளே விஜயலட்சுமி மீது சில தினங்களுக்கு முன்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் ஒரு பகீர் தகவலை தெரிவித்தார்.
அப்போது, "என்அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருஷமாக துபாய் பார்-ல் டான்ஸ் ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள்.

அடித்து உதைத்தனர்
ஆனால் எனக்கு அதில் சுத்தமா உடன்பாடு இல்லை. அதனால அங்கிருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். ஆனால் அங்கேயும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள். என் அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

வரதட்சணை
என் அண்ணிகிட்ட 10 லட்சம் ரூபாய் பணமும் நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். என் அம்மா இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை பற்றி எந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாலும் பெரிசா எடுத்துக்கறது இல்லை. இதனால என் உயிருக்கு ஆபத்து இருக்கு. என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று அழுதுகொண்டே சொன்னார்.

அதிர்ந்த போலீஸ்
இன்ஸ்பெக்டர் மகள் இப்படி சொன்னதும் காவல்துறை சற்று அதிர்ந்து போனது. மகளின் புகார் சம்பந்தமாக என்ன நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டன என்று தெரியவில்லை.

மன்னிப்பு
இந்நிலையில், முறையிட்ட போலீசாரிடமும், நண்பர்கள், சொந்தக்காரர்களிடமும் தான் மன்னிப்பு கேட்க போவதாக பெண் இன்ஸ்பெக்டர் மகள் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான பத்திரிகை செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கேண்டி ஸ்வாரிஸ்
அதில், "26.4.2019 அன்று, என் அண்ணன், மற்றும் அண்ணி ஆகியோருடன் கொடுத்த குடும்ப பிரச்சனையை, பிரஸ் மீட் வைத்து தெரிவித்ததில், அது சம்பந்தமாக காவல் துறையிடமும், தன் உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பு கேட்க நாளை வருகிறேன்" என்று குறிப்பிட்டு, கீழே, "கேண்டி ஸ்வாரிஸ்" என்று கையெழுத்து போட்டுள்ளார்.

நாளை தெரியும்
பெண் இன்ஸ்பெக்டர் மீது பெற்ற மகளே எதற்காக இப்படி ஒரு பரபரப்பு புகார் சொன்னார், இதற்கு நடுவில் என்ன நடந்தது, இப்போது எதற்காக மன்னிப்பு கேட்க போகிறார் என்பதெல்லாம் நாளை தெரிந்து விடும்!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications