வெறிச்சோடிய சாலைகள்.. அதிகரிக்கும் கொரோனா தொற்று: கோவையில் கூடுதல் கட்டுப்பாடு

கோவையில் தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

கடந்த 3 மாத காலத்துக்கு முன்பு சென்னையை விட மிரட்டி கொண்டிருந்தது கோவைதான்.. தொற்று மிக அதிகமாகிவிட்டது.. கோவையை காப்பாற்றுங்க என்று வானதி சீனிவாசன் டெல்லி வரை பிரச்சனையை கொண்டு போனார்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து கோவைக்கு பயணம் செய்து தொற்றை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்..

இதனிடையே லாக்டவுன் போட்டுவிடவும், அது மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க உதவியது. தடுப்பூசி செலுத்தி கொள்வதிலும் பொதுமக்களும் ஆர்வம் காட்டினர்...

 தடுப்பூசி

தடுப்பூசி

சுகாதார அதிகாரிகளும் சிறப்பு முகாம்களை நடத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை வேகமாக நடத்தி வருகிறார்கள்.. பிறகு மெல்ல மெல்ல கோவை மீண்டு வந்தது. எனினும் தற்போது, கோவையில் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது... தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் கோவை மாவட்டமே நீடித்து வருகிறது...

 சிகிச்சை

சிகிச்சை

இரண்டு வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது... மீண்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 239 பேருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது... இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது... 2134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 எச்சரிக்கை

எச்சரிக்கை

இனி 3வது அலை வரப்போவதாக எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது.. அதில் கோவை மாவட்டத்துக்குதான் அதிக பாதிப்பும் என்றும் சொல்லி வருகிறார்கள்.. பக்கத்து மாநிலமான கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது... இதனால் வாளையாறு சோதனைச் சாவடியில் மீண்டும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. அனைத்து செக்போஸ்ட்களிலும் கூடுதல் கண்காணிப்புகள் நடந்து வருகிறது.. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே வெளிமாநில மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

 தயார் நிலை

தயார் நிலை

கோவையில் இருந்து கேரளாவுக்கு தினமும் பணிநிமித்தம் சென்று வருபவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.. அதேபோல வீடு தோறும் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது... அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் எப்போதுமே உள்ளன.. படுக்கை பற்றாக்குறைகளும் இல்லை.. இதனிடையே, மாவட்டத்தில் தொற்று அதிகரிக்கும் நிலை தொடர்ந்தால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின...

 தொற்று

தொற்று

அதற்கேற்றபடி, கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட என்எச்ரோடு, டவுன் ஹால், கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை குறிப்பிட்ட 44 பகுதிகளில் மக்கள்‌ கூட்டம்‌ அதிகமாக காணப்படுவது கண்டறியப்பட்டது.

 வெறிச்சோடிய சாலைகள்

வெறிச்சோடிய சாலைகள்

இதையடுத்து, கோவையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 44 பகுதியில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்டவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்... அதன்படி, கோவையில் இன்று அத்தியாவசிய பொருட்கள் கடையை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+