எடப்பாடிக்கு அதிரி புதிரி ஷாக் கொடுத்த கோவை செல்வராஜ்.. சசிகலா அதிமுகவில்தான் உள்ளார்! அதிரடி பேட்டி
சென்னை: சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகரின் ஓபிஎஸ் அணி அதிமுகவின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கோவை செல்வராஜ் கூறுகையில், சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார்.
அவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. வரும் 28 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து ஓபிஎஸ்தான் முடிவு எடுப்பார் என்றார்.

ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தன. இதையடுத்து இரட்டை இலை சின்னம் கிடைக்க இரு அணிகளும் ஒன்றிணைய முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஓபிஎஸ் ஒரு நிபந்தனையை முன் வைத்தார். அதாவது சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
இதை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஏற்றார். இரு அணிகளும் இணைந்தன. இதையடுத்து அதிமுக பொதுக்குழு கூட்டி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார், அந்த பதவியும் நீக்கப்பட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது.

பொதுச் செயலாளர்
பொதுச் செயலாளருக்கு இணையான இந்த பதவியில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை எழுந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஏகோபித்த ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டார்.

ஒற்றைத் தலைமை
இந்த ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம், கே பி முனுசாமி உள்ளிட்டோரை ஓபிஎஸ் அதிமுகவிலிருந்தே நீக்கினார். இப்படியாக தினந்தோறும் நீக்கும் படலங்கள் நடைபெற்று வருகின்றன.
Recommended Video

சசிகலா சிறையில்
அது போல் சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் அதிமுகவை கைப்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். ஆனால் சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என எடப்பாடி உள்ளிட்டோர் உறுதியாக இருந்தன. ஆனால் ஓபிஎஸ் மட்டும் சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை தேவர் ஜெயந்தியிலும், ஆறுமுகசாமி ஆணைய விசாரணையிலும் முன் வைத்து அதிமுகவின் இரு அணிகளும் இணைய அவர் விதித்த நிபந்தனைகளை அவரே நீர்த்து போக செய்துவிட்டார் என்றே எடப்பாடி தரப்பு விமர்சனம் செய்தது.
-
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications