Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேட்டில் ஸ்பெஷல் மார்க்கெட்? இப்படியொரு மேட்டரா? சிசிடிவி இருக்கே? நாளைக்கு பண்டிகை வேற

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் புதிய விவகாரம் ஒன்று முளைத்துள்ளது.. விரைவில் விநாயகர் சதுர்த்தி வரவுள்ள நிலையில், இது தொடர்பான நடவடிக்கையை சந்தை நிர்வாகம் கையில் எடுக்க போவதாக தெரிகிறது.

பொதுமக்கள் தங்களின் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடுவதற்காகவே, சிறப்பு சந்தை திறக்கப்படும்.. அதாவது, பூஜை பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்காக இப்படி சிறப்பு சந்தைகள் வருடந்தோறும் திறக்கப்படுவது வழக்கமாகும்.

koyambedu special market

மலர் அங்காடி: விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை என எந்த விழாக்காலமாக இருந்தாலும் சிறப்பு சந்தை திறக்கப்படும்.. கோயம்பேடு மலர் அங்காடி வளாகம் மற்றும் உணவு தானிய வளாகத்தில் இந்த சிறப்பு சந்தை திறக்கப்படுவதால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது..

ஆரம்பத்தில், இந்த ஸ்பெஷல் சந்தை, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், அதற்கு பிறகு மெட்ரோ ரெயில் பணிகள் நடப்பதால், கடந்த வருடம் ஏலம் விடப்படவில்லை.. அதனால், மார்க்கெட் நிர்வாகமே நேரடியாக சிறப்பு சந்தையை நடத்தியது.

மலிவு விலை: பூஜை பொருட்கள் அனைத்துமே ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைப்பதால், ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சிறு வியாபாரிகளும் இந்த சிறப்பு சந்தையில் குவிவது வாடிக்கையாகும். அதேபோல, புறநகரில் உள்ள பல்வேறு பெரிய தொழில் நிறுவனத்தினரும், நேரடியாக கோயம்பேட்டுக்கு வந்து அதிக அளவில் பூஜைக்குதேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள். இந்த அளவுக்கு பயன்தரும் இந்த ஸ்பெஷல் சந்தை தற்போது திறக்கப்படவில்லையாம்.

ஏற்கனவே, கொரோனா பரவலுக்கு பிறகு, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தையை திறக்கப்படாமல் உள்ளது. விரைவில் விநாயகர் சதுர்த்தி வரஉள்ள நிலையில், இப்போதும் சிறப்பு சந்தை திறக்கப்படாதது வியாபாரிகளை கவலைக்குள்ளாக்கி உள்ளதாம்.

பூஜை பொருட்கள்: அதுமட்டுமல்லாமல், லாரிகளில் கொண்டுவரும் பூஜை பொருட்களை சந்தை நுழைவு வாயிலிலேயே வியாபாரிகள் விற்பனை செய்கிறார்களாம். இதனால், தங்களது வியாபாரம் பாதிப்பதாக, நிரந்தர வியாபாரிகள் புலம்புகிறார்கள்.

வெளியூர்களில் இருந்து பல்வேறு பொருட்களை லாரிகளில் கொண்டுவந்து, பழச்சந்தை பகுதியிலேயே அதாவது 4-வது எண் நுழைவு வாயில் பகுதியில் நுழைந்து அவர்களே நேரடி விற்பனையும் செய்கிறார்களாம்.. இதனால் சந்தையில் நிரந்தரமாக கடை வைத்து வியாபாரம் செய்வோரின் கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதாக கூறுகிறார்கள்.

சிசிடிவி கேமரா: வழக்கமாக, லாரிகளில் பொருட்களை இறக்கிவிட்டு, மட்டுமே செல்ல வேண்டுமே தவிர, இவர்களே நேரடியாக இறங்கி விற்கவும் ஆரம்பித்துவிட்டது விதிமீறலாக கருதப்படுகிறது. இந்த சந்தையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் இவை அத்தனையும் பதிவாகியிருக்கிறது. எனவே, வீடியோவை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுத்து, தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் நிரந்தர வியாபாரிகள்.

இந்த கோரிக்கைகள் கடந்த சில நாட்களாகவே எதிரொலிக்க துவங்கிவிட்டது. இதையடுத்து, லாரிகளில் கொண்டுவந்து பூஜை பொருட்களை விற்பனை செய்வது தடுக்கப்படும் என்று சந்தை நிர்வாகம் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளதாம்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு: முன்னதாக, பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம் ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் அதாவது 6,7,8 தேதிகளில் 1,755 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேபோல, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்தும் இன்று 6 மற்றும் நாளை, கோயம்பேட்டிலிருந்துதிருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்ககது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+