கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மாற்றம்.. கோயம்பேட்டில் மார்க்கெட்டும் மாறுது.. ரூ.15 கோடி? வாவ் தமிழக அரசு
சென்னை: கோயம்பேடு பகுதியில் விரைவில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது.. இதுகுறித்து தமிழக அமைச்சர் தெரிவித்திருக்கும் நம்பிக்கை தகவலானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும், தந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம்?
வழக்கமாக சென்னையில் மழை பெய்தால், பெரும்பாலான தாழ்வு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துவிடும்.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் மழைநீர் தேங்குவது போலவே, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பகுதியிலும் மழைநீர் சூழ்ந்து விடுகிறது..

பஸ் ஸ்டாண்டை போலவே, கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலும் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள், மளிகை, காய்கறி கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என லட்சக்கணக்கானவர்கள்,, வந்துசெல்லும் இடமாக கோயம்பேடு மார்க்கெட் உள்ளது.
ஆனால், ஓரிரு நாட்கள் பெய்த லேசான மழைக்கே கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல தேங்கி விடுவதாகவும், இதனால் மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் வியாபாரிகள், மூட்டை தூக்கி செல்லும் கூலி தொழிலாளர்கள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் என அனைவரும் மார்க்கெட்வளாகத்தில் நடந்து செல்ல கூட முடியாமல் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் சொல்கிறார்கள்.
குட்நியூஸ்: இதனால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகளும் வேதனையை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், இதற்கெல்லாம் தீர்வு தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. இன்றைய தினம் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கோயம்பேடு வணிக வளாகத்தை ஆய்வு செய்தார்...
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பெருமழை வெள்ளத்தின்போது ஏற்படுகின்ற தண்ணீர் தேக்கத்திற்கு நிரந்தர தீர்வாக முதல் கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் மழை நீர் கால்வாய் அமைப்பதற்கு உண்டான ஒப்பந்தங்கள் நிறைவுற்று பருவமழையை பொறுத்து அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மொத்த விற்பனை: அதேபோல் ஏற்கனவே இருக்கின்ற புதிதாக கட்டப்பட இருக்கின்ற கால்வாய்களை தவிர்த்து 850 மீட்டர் அளவிற்கு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி தொடங்குகிற போது கட்ட கட்டப்பட்ட அந்த கால்வாயை மறுசீரமைக்க வேண்டும் என்று சட்டமன்ற பேரவை உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கின்றார். அந்த பணிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இப்போது மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், இந்த பகுதியில் பெய்கின்ற அடிக்கடி மழைக்கு தண்ணீர் தேங்குகின்ற நிலை இருக்கின்றது..
பணிகள்: முழுவதுமாக சிஎம்ஆர்எல் பணி நிறைவுறுவதற்கும், சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட இருக்கின்ற 770 மீட்டர் அளவு குண்டான கால்வாய் பணிகளும் இந்த பருவமழைக்கு பிறகு தான், அவை முழுமையாக கட்டுமான பணி நிறைவு பெறுகின்ற சூழ்நிலை இருப்பதால், அங்கு தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக 60 ஹெச்பி அளவிற்கு புதிதாக மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவைகளை உடனடியாக அந்தப் பகுதியில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அப்போது, உதயநிதி பேசும்போது, "வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கிவிடும். அதனால் மழைநீர் வடிகால் பணி, மின்வாரிய கேபிள்களை அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி என ஏற்கனவே செய்து வரும் பணிகளை விரைந்து முடித்துவிடுங்கள்.அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் தடுக்கும் வகையில் புதிய பணிகளை எடுப்பதற்கு முன், நாம் ஏற்கனவே எடுத்து முடிக்காமல் உள்ள பணிகளை செய்து முடித்துவிட வேண்டும்.
தாழ்வான பகுதிகள், மழைக்காலங்களில் அதிகமாக தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பட்டியல் வார்டு வாரியாக உள்ளது. எனவே, தேங்கும் மழை நீரை வெளியேற்றும் மோட்டார் பம்புகள், மக்களை காப்பாற்ற அழைத்து வருவதற்கான படகுகளை ஒரே இடத்தில் வைத்திருக்காமல், அந்தந்த வார்டுகளுக்கு இப்போதே பிரித்து வழங்கி பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications