சர்னு "இறங்கி" போயிருச்சு வெள்ளை பூண்டு.. சென்னை கோயம்பேட்டில் திடீர் மகிழ்ச்சி.. சூப்பர் சேஞ்ச்
சென்னை: ஒரு மகிழ்ச்சியான தகவல் கோயம்பேட்டிலிருந்து வெளியாகி உள்ளது.. இப்போதுதான் ஏழை, நடுத்தர மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.. என்ன காரணம்?
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படுவது நம்முடைய கோயம்பேடு மார்க்கெட்டைதான்.. ஏனென்றால், இங்கு 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது.

காய்கறிகள்: அதேபோல, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிராவிலிருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிவது தினசரி வாடிக்கையாகும். அதனால்தான், இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் விற்பனை இங்கு ஜரூராக நடக்கும்.
தற்போது கோடை காலம் துவங்கியிருக்கும் சூழலில், காய்கறிகள், பழங்களின் வரத்துகள் அதிகமாக துவங்கியுள்ளன.. அதனால், இனிவரும் நாட்களில், நள்ளிரவு முதல் விடிகாலை வரை படுபஸியாக வாகன போக்குவரத்து நடமாட்டம் கோயம்பேட்டில் நிச்சயம் காணப்படும் என்றே தெரிகிறது.
பருவமழை: ஆனால், காய்கறிகளின் விலையை நினைத்தால்தான், நமக்கு ஒரு நிமிஷம் தூக்கி வாரிப்போடுகிறது.. தமிழகத்தில் ஜனவரி மாதம் வரை பருவமழை காரணமாக காய்கறி விலையானது உச்சத்தில் இருந்தது. அதன் பின் படிப்படியாக காய்கறி விலை குறைந்து வருகிறது.. அவ்வப்போது, சில காய்கறிகளின் விலைகள் மட்டும் திடீர் திடீரென உயர்ந்து கிலியை தந்துவிடுகின்றன.
அதிலும் பூண்டு விலை கிலோ 600 என்றெல்லாம் பயமுறுத்தியது.. இதற்கு பிறகு இஞ்சி விலையும் உயர்ந்தது.. எனினும், கடந்த ஜனவரி மாதம் வரை பருவமழை காரணமாக, காய்கறி விலையானது உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால், காய்கறி விலைகளும் குறைய தொடங்கி விட்டது.. இன்றைய காய்கறி நிலவரம் இதுதான்:
வெங்காயம்: வெங்காயம் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.28, தக்காளி ரூ. 30, கேரட் ரூ. 65, முட்டைகோஸ் ரூ.16, கத்திரிக்காய் ரூ. 40க்கு விற்கப்படுகிறது.. சில நாட்கள் வரை மிரட்டிக்கொண்டிருந்த வெள்ளை பூண்டு, இப்போதுதான் ஒருவழியாக குறைந்துள்ளது.
மத்திய பிரதேசம், குஜராத், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பூண்டு சாகுபடி செய்யப்படுவதுடன் விளைச்சலும் அதிகமாகி உள்ளதால், வரத்தும் கூடியிருக்கிறது.. எனவே, பூண்டு விலை கிலோ ரூ.150 ஆக குறைந்துள்ளது.. 600 ரூபாயிலிருந்து 15 நாட்களுககுள் 150 ரூபாய்க்கு பூண்டு விற்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது..!
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications