கோயம்பேடு மீண்டுமா? அதென்ன ரெட் கலர்ல? ஸ்ஸ்ஸூப்பா, வெயில் முடியல.. கவனம் ஈர்க்கும் சென்னை கோயம்பேடு
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பரபரப்பு அடங்கினாலும், கோயம்பேடு மார்க்கெட் விவகாரம் தலைப்பு செய்திகளாகவே வலம்வருகின்றன.. காரணம், தற்போது கோடை காலம் துவங்கிவிட்டது.
எப்போதுமே ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் வழக்மாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களிலிருந்து பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும்... ஜனவரியில் ஆரம்பிக்கும் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும்.
கோயம்பேடு: ஆனால், கோயம்பேடுக்கு பூண்டு வரத்து குறைந்துவிட்டது.. மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு, இப்போது வெறும் 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது.. இதனால், ஒரு கிலோ பூண்டு 300, 400, 500 என இல்லத்தரசிகளை மிரட்டும் அளவுக்கு சென்றுவிட்டது.

பூண்டு விலை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், வெயில் சீசன் துவங்கிவிட்டது. கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே, கோடை வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது..
வெயில் தாக்கம்: நாளடைவில் வெயில் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதனால், சென்னையின் ஒவ்வொரு சாலையோரங்களிலும், இளநீர், நீர் மோர், கரும்புச்சாறு, பழச்சாறு, நுங்கு, தர்பூசணி பழங்கள், கேழ்வரகு கூழ், கிர்ணி பழம் ஜூஸ், சர்பத் என குட்டி குட்டி கடைகள் முளைக்க துவங்கிவிட்டன.
அந்தவகையில், தர்பூசணிக்கான டிமாண்டும் இப்போதே கூடிவிட்டது.. விற்பனையும் அதிகரித்துவிட்டது.. சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தர்பூசணிகளை பொதுமக்கள், அதிக அளவில் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, வெயிலின் தாக்கம் காரணமாக, கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகமாகி உள்ளதாம்.
குவியல் குவியலாக: முக்கியமாக, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் கோயம்பேட்டுக்கு லாரிகளில் வந்து இறங்கி வருகின்றன..
இப்போதைக்கு தினமும் 20க்கும் மேற்பட்ட லாரிகளில் சுமார் 200டன் அளவுக்கு தர்பூசணி பழங்கள் வந்து குவிகின்றன.. கோயபேட்டில், தர்பூசணி 1 கிலோ ரூ.18-க்கு விற்பனையாகிறது.. இதுவே வெளிகடைகள், சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.30 வரை விற்கிறார்களாம்.
தேவை: எனவே, சிறுசிறு கடைக்காரர்கள், கோயம்பேடுக்கு சென்று தினசரி விற்பனைக்காக, தர்பூசணிகளை வாங்கி வருகிறார்கள். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கமும் அதிகரிக்கும், அதற்கேற்றபடி, தர்பூசணி பழங்களின் வரத்தும் அதிகரிக்கும், மக்களின் நுகர்வும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், மக்களின் கவனத்தை மீண்டும் குவித்து வருகிறது கோயம்பேடு..!!
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications