கோயம்பேடு தலைவலி.. பஸ் ஸ்டாண்டை விடுங்க.. மார்க்கெட் கிட்ட சாட்டையை சுழட்டும் சென்னை போலீஸ்.. சபாஷ்
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் புது சிக்கல் ஒன்று கிளம்பிய நிலையில், சென்னை போலீசார் முக்கிய அதிரடியை கையில் எடுத்துள்ளனர். என்ன அது?
சென்னையில் டிராபிக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விரைவு பஸ்கள் உட்பட ஆம்னி பஸ்கள் எல்லாமே கிளாம்பாக்கத்துக்கு போய்விட்டன. குறைந்த எண்ணிக்கையிலான எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இயக்கப்பட்டு வருகின்றன..
இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை.. பஸ் கோயம்பேடு ஸ்டாண்டே காலியாக காணப்படுகிறது.. இந்த சந்தர்ப்பத்தைதான் சமூக விரோதிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார்களாம்..

பஸ் ஸ்டாண்டு: சுற்றுவட்டார பகுதிகளிலிருக்கும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் போன்றோர், குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பதுங்கி கொள்கிறார்களாம்.. போதாக்குறைக்கு மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிட்டு பதுங்கிவிடுவதாக புகார் கிளம்பி உள்ளது. கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதியிலிருக்கும் ரவுடிகள், திருட்டு, வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுவிட்டு, பஸ் ஸ்டாண்டில் வந்து பதுங்கிவிடுவாகவும் கூறப்படுகிறது.
சிலசமயம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள்யே கைவரிசையை காட்டுகிறார்கள். அதனால், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
காவலர்கள் எண்ணிக்கை: இப்படிப்பட்ட சூழலில்தான், கோயம்பேட்டு மார்க்கெட்டில், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணயை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாக வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது.. இந்த கூட்டத்தில், இரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, வியாபார நேரத்தில் ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், வியாபாரிகளிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களின் விவரங்களை சங்கத்தின் மூலமாக 15 நாட்களுக்குள் காவல்துறைக்கு அளிக்க வேண்டும் என்றும் காவல் இணை ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தீவிர கண்காணிப்பு: உணவு தானிய அங்காடியில் இரவு 7 மணி முதல் அதிகாலை வரை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் இணை ஆணையர்.
அதுமட்டுமல்ல, சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தி, மார்க்கெட்டுக்கு வரும் சரக்கு வாகனங்களை தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து வருவதை தடை செய்யலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். மொத்தத்தில், காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையானது, வியாபாரிகளுக்கும் சென்னைவாசிகளுக்கும் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications