"விபச்சாரம்".. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில்.. நள்ளிரவு சுரேஷுக்கு வந்த "சபலம்".. 4 பெண்களாமே.. ஒரே அலறல்

இளைஞரை சுற்றி வளைத்து பணம் பறித்த பெண்களை தேடி கொண்டிருக்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த சமுதாயத்தில், ஒரு ஆண் தனியாக நடமாடுவதே, மிகவும் சிக்கலாக இருக்கிறது.. சில பெண்களால், இவர்களது உயிருக்கும் ஆபத்து வந்துவிடும் சூழலும் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.

பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பல பரிதாப பெண்கள் குடும்ப சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்..

மேலும் சிலபெண்கள் வாயில்லா பூச்சிகளாய் தவித்து வந்த நிலையில், தற்கொலை முடிவையும் எடுத்து வருகின்றனர்.

 கோயம்பேடு

கோயம்பேடு

சில பெண்களோ, நேரடியாகவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் சில விநோதங்களும், விசித்திரங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கின்றன... அப்படித்தான் அரியானா மாநிலத்திலும் சில தினங்களுக்கு முன்பு நடந்தது.. கர்னல் என்ற பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞருக்கு, ஃபேஸ்புக்கில் ஒரு பெண் பழக்கமாகி உள்ளார்.. அவரது கவர்ச்சி பேச்சால், இளைஞர் விழுந்தே விட்டார்.. ஒருநாள் இளைஞரை ஹோட்டல் ஒன்றிற்கு வர சொல்லி உள்ளார் அந்த பெண்.. இந்த இளைஞரும், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு போனார்.

 தண்ணி அடித்தனர்

தண்ணி அடித்தனர்

இருவரும் அங்கே ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. கொஞ்ச நேரத்தில் இளைஞருக்கு போதை அதிகமாகிவிட்டது.. அடுத்த கொஞ்ச நேரத்தில், பெண்ணின் ஆண் நண்பர்கள் திடீரென அங்கே நுழைந்து, இளைஞரை கடுமையாக தாக்கினார்கள்.. பிறகு, இளைஞரை, அந்தப்பெண் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. அதை வீடியோவாகவும் அந்த பெண் எடுத்து வைத்துக் கொண்டுள்ளார்.
அங்கிருந்து தப்பித்து சென்று, போலீசுக்கு புகார் கொடுக்க ஓடினார் அந்த இளைஞர்.. அதற்கு பிறகு அந்த கேஸ் என்ன ஆனது என்றே தெரியவில்லை.

லாட்ஜ்

லாட்ஜ்

இப்போது இன்னொரு சம்பவம் நம்ம தமிழ்நாட்டில், நம்ம சென்னையில் நடந்துள்ளது.. வடபழனியில் ஒரு தனியார் லாட்ஜில் சுரேஷ் என்பவர் தங்கி, சமையல் வேலை செய்து வருகிறார்... இந்நிலையில், நேற்றிரவு காஞ்சிபுரத்துக்கு செல்வதற்காக, சுரேஷ் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துள்ளார்.. காஞ்சிபுரம் பஸ்ஸுக்காக காத்திருந்தார்.. அப்போது அங்கு 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், சுரேஷ் பக்கத்தில் வந்து நின்றார்.. அவராகவே பேச்சு தந்தார்.. அடுத்த சில நிமிடங்களில், ஆசைவார்த்தைகளை சொல்லி, சுரேஷை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.

சபலம்

சபலம்

அந்த பெண்ணை பார்த்ததும், சுரேஷுக்கு சபலம் வந்துவிட்டது.. உடனே, அந்த பெண்ணுடன் அவர் கூப்பிட்ட இடத்துக்கு பின்னாடியே கிளம்பி சென்றார்.. அந்த பெண், சுரேஷை தாம்பரத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்... ஆசைஆசையாய் வீட்டிற்குள் சுரேஷ் நுழைந்தால், அங்கு ஏற்கெனவே 3 பெண்கள் இருந்தனர்.. அவர்களை பார்த்ததும் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து, சுரேஷ் அங்கிருந்து தப்பித்து வரமுயன்றார்.. ஆனால், அந்த 4 பெண்களும் சுரேஷை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்க ஆரம்பித்துவிட்டனர்.. இதில் சுரேஷ் வலி பொறுக்க முடியாமல் அலறினார்..

 கோயம்பேடு

கோயம்பேடு

பிறகு, அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம், ஏடிஎம் கார்டுகள் என அனைத்தையும் 4 பெண்களும் பிடுங்கி கொண்டனர்.. ரத்தம் சொட்ட சொட்ட அவர்களிடம் இருந்து தப்பிய சுரேஷ் சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார்... இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய துவங்கி உள்ளனர்.. ஆனால், அந்த 4 பெண்களுமே அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார்கள்.. இவர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+