கோயம்பேட்டில் மாற்றம்? காய்கறிகள் விலையில் குபீர் சர்ப்ரைஸ்.. சென்னை மார்க்கெட்டில் மீன்கள்.. ஹேப்பி
சென்னை: தமிழகம் முழுவதிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல பனிப்பொழிவு பரவலாக இருந்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்தே காணப்பட்டது.. இன்றைக்கு சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை எவ்வளவு தெரியுமா? மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், மீன்களின் விலையில் மாற்றம் உள்ளதா? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களாக இருக்கக்கூடிய கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து அதிகளவிலான காய்கறிகள் லாரிகளில் வந்து இறங்குகின்றன.

எனினும், கடந்த மே மாதத்தில் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் காய்கறி வரத்து குறைவாக இருந்தது. இதனால் காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்தே காணப்பட்டது.
மழை கொட்டியது
குறிப்பாக, கடந்த மே மாதத்தில், வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளியின் விலை 30 ரூபாய்க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காயின் விலை 400 விற்பனை செய்யப்பட்டது.. உருளைக்கிழங்கு 45 ரூபாய்க்கும், பீன்ஸ், 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.. பூண்டு ரூ. 380-க்கு விற்பனை செய்யப்பட்டது..
மழையின் தாக்கம் மழையின் எதிரொலியாக முக்கியமான அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்தது. மழையின் தாக்கம் குறைந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிவரத்து அதிகரிக்கும் என்றும் அப்பொழுது காய்கறி விலைகள் குறையும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
வியாபாரிகள் நம்பிக்கை
இந்நிலையில் வியாபாரிகள் தெரிவித்திருந்ததுபடியே, அனைத்து காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சல்லுனு குறைந்த காய்கறி அதன்படி இன்று 1 கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கும். தக்காளி 7 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், முருங்கைகாய் 40 ரூபாய்க்கும். வெண்டைக்காய் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை ஏற்றம் பெற்றிருந்ததால் கவலையில் இருந்த இல்லத்தரசிகள், தற்போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீனவர்கள் மகிழ்ச்சி
அதேபோலம், மீன்பிடிதடைக்காலம் முடிந்தும், கடலில் காற்றின் வேகம் குறைந்ததால் 2 நாட்களுக்கு முன்பு, மீன்வளத்துறையிடம் இருந்து மீன்பிடி அனுமதிச்சீட்டை பெற்றுக்கொண்டு தென்கடலான மன்னார் வளைகுடா கடலில் மீனவர்கள் நேற்று மீன் பிடித்து வந்தனர்,
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மீன்களின் வரத்து இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீன்களின் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்வதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம். .












Click it and Unblock the Notifications