சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொளுந்து விட்டு எரிந்த தீ - நாசமான 5 ஆம்னி பஸ்கள்
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 5 பஸ்களில் தீ பிடித்து மளமளவென எரிந்தன. இதில் 3 பேருந்துகள் முற்றிலும் நாசமானது.
சென்னை: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 5 ஆம்னி பேருந்துகள் திடீரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர்.
இதில் 5 பேருந்துகளுமே சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகள் 100 நாட்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளன. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று காலையில் ஒரு பேருந்தில் தீ பிடித்தது. தீ வேகமாக பரவி 5 பேருந்துகள் எரிந்தன.

இதில் 3 ஆம்னி பேருந்துகள் முழுமையாக எரிந்த நிலையில் 2 பேருந்துகள் லேசாக எரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 5 பேருந்துகளும் தீ விபத்தில் சேதமடைந்துள்ளன.

முதல்கட்டமாக 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் மேலும் பல பகுதிகளில் இருந்தும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் கோயம்பேடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. தீ பிற பகுதிகளுக்கும் பரவாமல் தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தீ விபத்து பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பஸ்கள் எரிந்து நாசமானது.

-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications