கிறிஸ்தவர்களை சீண்டிய பாஜக? சென்னை கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் வீடியோவுடன் நுழைந்த "யோவான்".. பரபரப்பு
சென்னை: கிறிஸ்தவ போதகர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக, பாஜக பிரமுகர் மீது புகார் தரப்பட்டுள்ளது.. என்ன நடந்தது?
சென்னை நெற்குன்றம் பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகர்கள், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கியிருக்கிறார்கள்.

அப்போது, பாஜவை சேர்ந்த சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆபாசமாக பேசியுள்ளதாக தெரிகிறது.. இதுதொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலானது.
புகார் மனு: இந்நிலையில், அதே நெற்குன்றம் பகுதியை சேர்ந்த யோவான் என்பவர் 2 நாட்களுக்கு முன்பு, கோயம்பேடு போலீசில் புகார் ஒன்றை தந்திருந்தார்.. அந்த புகாரில் கூறியிருப்பதாவது:
சென்னை நெற்குன்றம் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி, ஊழியம் செய்வதற்கு கிறிஸ்தவர்கள் சென்றபோது எங்களது வாகனத்தை வழிமறித்து பிச்சாண்டி(எ) ஜெண்டில்மேன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து எங்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் மத கலவரத்தை தூண்டும் வகையில் மிரட்டினார்.
வீடியோ ஆதாரம்: எனவே, கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக பிரமுகர் பிச்சாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யோவான் கேட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் போலீசில் சமர்ப்பித்திருந்தார்.
மேலும் இது தொடர்பாக கூறும்போது, "தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜ பிரமுகர் மதவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதால் கிறிஸ்தவர்கள் இடையே மனவேதனை உண்டாக்கி உள்ளது. எனவே பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
வழக்கு பதிவு: இந்நிலையில், கோயம்பேடு போலீசார் இது தொடர்பாக விசாரணையை துவக்கியிருக்கிறார்கள். அத்துடன், நெற்குன்றத்தில் கிறிஸ்தவ சபை ஊழியர்களிடம் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக பேசி, அவர்களை மிரட்டிய பாஜக பிரமுகர் பிச்சாண்டி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கையும் பதிவு செய்துள்ளார்கள்..
கோயம்பேடு காவல் நிலையத்தில் தேவாலய ஊழியர் யோவான், அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications