மீண்டும் ஒன்று சேரும் அதிமுக-பாஜக? குட்டையைக் குழப்பிய வி.பி.துரைசாமி.. பட்டென மறுத்த கேபி முனுசாமி!
சென்னை: அதிமுக - பாஜக இடையே கூட்டணி பேச்சு நடக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயாலாளருமான கே.பி.முனுசாமி கூறியுள்ளார். பாஜகவின் விபி துரைசாமி பேச்சுக்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார் கேபி முனுசாமி.
கூட்டணி பிளவு: சென்னையில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இனி எந்தச் சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஆனால், பாஜக தலைவர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லிக்கு சென்றார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், அதிமுக உடனான கூட்டணி முறிவு, தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் வியூகங்கள் குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
பாஜக ஆலோசனை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், இன்று அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் என்பதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், இன்று ஆலேசனைக் கூட்டம், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுக பாஜக கூட்டணி நீடிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கும். நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரியவர்கள் எல்லாம் பேசிவருகிறார்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்" என்று தெரிவித்தார்.
கேபி முனுசாமி மறுப்பு: அதிமுக தரப்பு, இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், பாஜகவின் வி.பி.துரைசாமி, அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி பேச்சு நடக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச்செயாலாளருமான கே.பி.முனுசாமி கூறியுள்ளார். வி.பி.துரைசாமியின் கருத்தை கே.பி.முனுசாமி உறுதியாக மறுத்துள்ளார்.
அண்ணாமலை டெல்லியில் இருக்கும் நிலையில், இன்று தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் தனியாக ஆலோசனை நடத்தினர். இன்று அதிமுகவின் 3 எம்.எல்.ஏக்கள் கோவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துப் பேசினர். இதனால், டெல்லி பாஜக தலைமை மீண்டும் கூட்டணியை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அதனை கேபி முனுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளது அரசியல் களத்தை பரபரப்பிலேயே வைத்துள்ளது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?











Click it and Unblock the Notifications