Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சி.வி.சண்முகத்திற்கு நன்றி சொன்ன கேபி முனுசாமி.. இந்த அடி அங்க எதிரொலிக்குமாம்! அடடே.. என்னவாம்?

விரைவில் பொதுக்குழு கூடி அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியில் கே.பி.முனுசாமி - சி.வி.சண்முகம் இடையே பனிப்போர் நடந்து வந்ததாகச் சொல்லப்பட்ட சூழலில், இன்று சி.வி.சண்முகத்தின் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி. உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்த நிலையில் ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகத்திற்கு நன்றி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி நடத்திய தர்மயுத்தம் வென்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஈபிஎஸ் அணி கொண்டாட்டம்

ஈபிஎஸ் அணி கொண்டாட்டம்

ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம், அந்த பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்பதும், ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதும் செல்லும் என்றும் தீர்ப்பு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஈபிஎஸ் அணியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

ஈரோட்டில் மாஜிக்கள்

ஈரோட்டில் மாஜிக்கள்

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் மதுரையில் இன்று ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் நடந்த 51 ஜோடிகள் திருமண விழாவில் பங்கேற்றனர். அதே சமயம், ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அதிமுக தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கருப்பணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுல இந்திரா, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக் கொண்டாடினர்.

 மீட்டுள்ளார் எடப்பாடி

மீட்டுள்ளார் எடப்பாடி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "உச்சநீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. அதிமுக மாபெரும் இயக்கம். எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இயக்கம். 31 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளோம். அப்படிப்பட்ட இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி இன்று போராடி மீட்டுள்ளார். இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் மத்தியில் சட்டப் போராட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி மீட்டுள்ளார்.

சி.வி.சண்முகத்திற்கு நன்றி

சி.வி.சண்முகத்திற்கு நன்றி

ஒன்றரை கோடி தொண்டர்கள் சார்பாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வெற்றிக்காக உழைத்த கழக வழக்கறிஞர் சண்முகம், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தர்மம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. சிலர் தர்ம யுத்தம் நடத்துவதாக சொன்னார்கள். ஆனால் உண்மையாக தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை?

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மக்களுக்காக என்ன செய்ய நினைத்தார்களோ அதை எடப்பாடி பழனிசாமி செய்து காட்டுவார். இந்த தீர்ப்பு நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும். நமது வேட்பாளர் தென்னரசு ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திமுக தலைவர் ஸ்டாலின், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதிமுக இல்லை என்றார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கேட்டார்கள். அதற்கெல்லாம் பதில் தான் இந்த தீர்ப்பு" எனத் தெரிவித்தார்.

விரைவில் பொதுச் செயலாளர்

விரைவில் பொதுச் செயலாளர்

ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, "நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்திருப்பது என்றால் ஓபிஎஸ் நீக்கப்பட்டதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்டதாகத்தானே அர்த்தம். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு முறைப்படி எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். அது கட்சி சார்ந்த நடவடிக்கை" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+