கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி.. திருமணம் ஆன 3 மாதத்தில் மரணம்! மீண்டும் ஒரு வரதட்சணை புகார்
சென்னை: வரதட்சணை புகார்கள் தமிழகத்தை உலுக்கி வருகின்றன. தற்போது கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி கவிதா திருமணம் ஆன 3 மாதத்தில் உயிரிழந்துள்ளார். எனது மகள் சாவுக்கு வரதட்சணை கொடுமை தான் என்றும், 100 பவுனுக்கு மேல் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்ததாகவும், மாப்பிள்ளைக்கு 13 பவுன் நகை பொட்டதாகவும் வேதனையுடன் கவிதாவின் தந்தை கூறியுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருபவர் தட்சினாமூர்த்தி. இவரது மகள் கவிதா. சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவர் பிரபலமான ஆன்மீக சொற்பொழிவாளரான கிருபாணந்த் வாரியாரின் கொள்ளுப்பேத்தி ஆவார்.

ஜபல்பூர் சென்றுள்ளனர்
கவிதாவுக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த நாகார்ஜுன் என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. நாகார்ஜூன் ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்துள்ளார். கல்யாணம் முடிந்த பிறகும் தனது மனைவியான கவிதாவை உடன் அழைத்து செல்லாமல் சென்னையில் விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், கடந்த மாதம் 10 ஆம் தேதி ஜபல்பூர்க்கு கவிதாவும் அவரது கணவர் நாகார்ஜூனும் சென்றுள்ளனர்.
திடீரென உயிரிழந்த கவிதா
அப்போது திடீரென நள்ளிரவு 12.30 மணிக்கு கவிதாவின் தந்தையை தொடர்பு கொண்ட நாகார்ஜுனா குடும்பத்தினர், உங்கள் மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் பதறிப்போன கவிதாவின் பெற்றோர்கள் விமானம் மூலம் ஜபல்பூர் ராணுவ மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது, கவிதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஜூன் 11 ஆம் தேதி அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனை முடிந்ததும், கவிதாவின் உடலை சென்னைக்கு கொண்டுவர மாப்பிள்ளை வீட்டினர் ஏற்பாடு செய்துள்ளனர். கவிதாவின் பெற்றோரை கேக்காமலே இதை செய்து இருக்கிறார்கள்.
இடம் வாங்கி தர சொல்லி துன்புறுத்தல்
கவிதாவின் உடல் சென்னைக்கு கொண்டு வந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. பின்னர் ஒரு வார காலத்திற்கு சென்னையில் உள்ள கவிதாவின் வீட்டிலேயே நாகாராஜுனா, அவரது தந்தை - தாய் தங்கியிருந்துள்ளனர். இதற்கிடையே, மாப்பிள்ளை நாகார்ஜுனாவின் நடத்தையில் கவிதாவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜபல்பூர் கோயம்பேடு காவல் நிலையத்தில் கவிதாவின் தந்தை புகாரளித்துள்ளார்.
மருத்துவமனை கட்ட இடம் வாங்கி தர சொல்லி கவிதாவை மாப்பிள்ளை வீட்டினர் துன்புறுத்தியதாகவும், மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாப்பிள்ளை வீட்டினர் கொடுத்த கொடுமையில் கவிதா மரணம் அடைந்து இருப்பதாக சந்தேகம் தெரிவித்த கவிதாவின் தந்தை இது தொடர்பான ஆவணங்களையும் கொடுத்து இருக்கிறார்.
தலையில் முன், பின்புறம் காயம்
ராணுவ மருத்துவமனையில் கொடுத்த இறப்பு சான்றிதழில் தலையில் அடிபடவில்லை என்று தெரிவித்து இருந்ததாகவும், அரசு மருத்துவமனை உடற்கூறாய்வு அறிக்கையில் தலையின் முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் பலமாக அடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
அன்று மொழி புரியாததால் மகளின் உடலை வாங்கி வந்துவிட்டதாகவும் வரதட்சணை கொடுமையால் தனது மகளை கொலை செய்த நாகார்ஜூனா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகாரளித்தாகவும் தற்போது வரை புகாரை வாங்க மறுப்பதாகவும் வேதனையுடன் கூறினார். இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த கவிதாவின் தந்தை கூறியதாவது:-
வரதட்சணை கொடுமைதான் காரணம்
100 பவுனுக்கு மேல் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்ததாகவும், மாப்பிள்ளைக்கு 13 பவுன் நகை பொட்டதாகவும் வேதனையுடன் கூறிய கவிதாவின் தந்தை கூறியுள்ளார். 100 பவுனுக்கும் மேலே நகை போட்டேன். என் மகளுக்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இந்த மூன்று மாதத்தில் என் மகளிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகி நாகர்ஜுனாவிற்கு நின்றுள்ளது.
சென்னையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நின்றுள்ளது. எனது மகள் மரணத்திற்கு வரதட்சணை கொடுமைதான் காரணம். என் பெண்ணிற்கு நீதி வேண்டும். காவல் நிலையம் உள்ளே விட மாட்டேங்கிறார்கள். நான் இரண்டு மணி நேரமாக இங்கே நிற்கிறேன்" என்று வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார்.
-
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications