Krishna Jayanthi Wishes Tamil: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் அனுப்பி மகிழ அழகிய புகைப்படங்கள் இதோ!!
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத், தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத், தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை, தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய் என்றாள், நம் தாய் ஆண்டாள் நாச்சியார்.
நமது பாவங்களை பொசுக்கும், கண்ணனை, மணிவண்ணனை சீராட்டி, தாலாட்டி மகிழும் நன்நாள்தான் கிருஷ்ண ஜெயந்தி திருநாள். கண்ணன் அவதரித்த இந்த பொன்னாளில், உறவினர்கள், நண்பர்களுக்கு அந்த வாழ்த்து அட்டைகளை அனுப்பி மகிழ்வோம். அவன் அருளாள் அவன் தாழ் பணிவோமாக.. Krishna Janmashtami, Krishna Jayanthi, Gokulashtami என்று அவன் பல உருவம் எடுத்தது போலவே பல பெயர்களால் கொண்டாடி மகிழ்கிறோம் அவன் அவதார திருநாளை. இதோ Wises Image Cards உங்களுக்காகவே..

1. நல்லதை காக்கவும் தீயதை அளிக்கவும் மீண்டும் பிறப்பான். கண்ணன்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.
2. நல்லவர்களை காத்து, தீயவர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட கண்ணன் பிறந்தான்.. இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

3. கிருஷ்ணர் அனைவரதும் வாழ்க்கையிலும் அன்பையும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் இந்நாளிலிருந்து அளிப்பார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

4. கண்ணனை போல் அனைவரிடத்திலும் அன்பாகவும் கருணையாகவும் வாழ்ந்திடுங்கள். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

5.மனதில் எந்த துன்பங்களும் இல்லாமல் கிருஷ்ணரின் குழந்தை மனம் போல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

6. கிருஷ்ணரினால் பூமியில் மழை பொழிந்து செழிப்பாவது போல் உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி எனும் மழை பொழிந்து நிரம்பட்டும். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

7. நன்மையோ தீமையோ, அவரவர் செய்யும் செயல்களுக்கு உண்டான பலனை, இன்று இல்லையானனும் என்றாவது நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும் ..!

8. எதிரியின் பலம் கண்டு அஞ்சாதே......!! எவனும் பலம் மட்டுமே கொண்டு உருவாக்கப்படவில்லை ......!! எவ்வளவு பலம் இருக்கிறதோ அதே அளவிற்கு பலவீனமும் இருக்கும்....













Click it and Unblock the Notifications