நாங்குநேரி கொடூரம்.. நேரில் பார்த்து மாரடைப்பால் பலியான உறவினர்! ஸ்டாலின் போட்ட உத்தரவு! நிதியுதவி
சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் தங்கையுடன் சேர்த்து மாணவன் சின்னத்துரையை அரிவாளால் வெட்டிய சம்பவத்தை நேரில் பார்த்து மாரடைப்பால் உறவினர் கிருஷ்ணன் உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவரது மகன் சின்னத்துரை (வயது 17). மகள் பெயர் சந்திரா செல்வி. சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை சில மாணவர்கள் சாதி ரீதியாக தொல்லை பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்தார். இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் சின்னத்துரையை துன்புறுத்திய மாணவர்களை எச்சரித்தது.
இந்த கோபத்தில் இரவில் சில மாணவர்கள் சின்னத்துரையின் வீட்டுக்கு சென்று அவரையும், தடுக்க சென்ற தங்கை சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டியது. இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்பட பல்வேறு தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மாணவர்கள் சாதிய பாகுபாட்டை கைவிட்டு சகோதர, சகோதரிகளாக பழக வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக சின்னத்துரை அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அந்த கும்பல் வெட்டியபோது கிருஷ்ணன் என்ற உறவினர் தடுக்க சென்றார். அவரை அந்த கும்பல் தள்ளிவிட்டு தப்பியது. இதில் மாரடைப்பு ஏற்பட்டு கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்நிலையில் தான் கிருஷ்ணனின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றுமு் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரையும் கடந்த 9 ம் தேதி அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை உறவினர் கிருஷ்ணன் (வயது 59) நேரில் பார்த்தார். இந்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications