'Thug life' பெயர் சரியில்லை.. இந்தியாவையே அச்சுறுத்தியவர்கள்.. மாற்றுங்க.. கிருஷ்ணசாமி போர்க்கொடி!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைஃப்' (Thug life) திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் இந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே 'சண்டியர்' என்கிற பெயரில் வெளிவர இருந்த கமலின் திரைப்படம், இவரின் எதிர்ப்பையடுத்துதான் 'விருமாண்டி' என மாற்றி வெளியாகியிருந்தது.
இந்நிலையில் 'தக் லைஃப்' திரைப்படத்தின் பெயரையும் மாற்ற வேண்டும் என்று இவர் வலியுறுத்தியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"தனது திரைப்படத்திற்கு 'Thug life' எனும் பெயரை நடிகர் கமல் தவிர்க்க வேண்டும். வர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தக் கூடாது!
'Thug Life' பெயரில் புதிய திரைப்படம் விரைவில் வெளிவர் உள்ளதாக தெரிகிறது. மிகவும் தவறான பொருள் கொண்ட 'Thug' எனும் பெயர் நடிகர் கமல்ஹாசனால் பெருமிதப்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது. அப்பெயர் கிஞ்சிற்றும் பிரபல்யப்படுத்துவதற்கோ, பெருமைப்படுத்துவதற்கோ உரியதல்ல ஏனெனில் 'Thugs' என்றால் பொறுக்கிகள் மூர்க்கர்கள் போக்கிரிகள் என்று வரலாற்று ஆசிரியர்களால் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய வரலாற்றை ஆழமாகப் படித்தவர்கள் 18 மற்றும் 19.ஆம் நூற்றாண்டுகளில் 'Trugs & Pindars' என்கிற மூர்க்கப் போக்கிரிக் கூட்டம் எந்த அளவிற்கு ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை நன்கு அறிவார்கள். 'Thugs & Pindaris' என்பவர்கள் ஔரங்கசீப்பின் ஆட்சிக்குப் பிறகு இந்திய அளவில் நிலவிய நிலையற்ற தன்மையைப் பயன்படுத்திக்கொண்டு மத்திய இந்தியாவில் துவங்கி இந்தியாவெங்கும் பரவிய வழிப்பறி கொள்ளை கூட்டம் ஆகும்.
அவர்கள் மத ரீதியாகவோ, இன மொழி ரீதியாகவோ அடையாளப்படுத்த முடியாத நாடோடி கும்புலவர் அவர்களுக் கொள்கையோ, கோட்பாடோ. ஒழுக்கமோ, பண்போ கிடையாது. வழிப்போக்கர்கமோடு வழிப்போக்கர்களாக அண்டிப் பழகி அவர்களை விரக்கம் இன்றி கொலை செய்துவிட்டு அவர்களின் பைகளைக் கொள்ளை அடிப்பது தான் அவர்களின் வாழ்வியல் முறை. அதில் பல குழுக்கள் கூட்டம் கூட்டமாக குதிரைகளில் வந்து மத்திய மற்றும் உத்திரப் பிரதேச சாம்பல் பள்ளத்தாக்குகளில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்களைப் போல கொள்ளையடித்தும் செல்வார்கள்.
ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு மேலாக இவர்களின் அட்டகாசங்கள் இந்தியாவெங்கும் கோலோச்சியது, பின் அவர்கள் கடுமையான போருக்குப் பின்னரே ஒடுக்கப்பட்டார்கள். எனினும் அவர்களின் மிச்சச் சொச்சங்களாக சமூகத்தில் பரவியும், பதுங்கியும் கிடக்கும் மூர்க்க போக்கிரித்தனம் கொண்டவர்களின் அடாவடி செயல்களை இச்சமூகம் இன்னும் எதிர்கொண்டுதான் வருகிறது.
அதன் வெளிப்பாடுகளாகவே தனித்து வீடுகளில் வசிக்கும் வயதானவர்களைக் குறி வைத்து கொலை செய்து, நகை உடைமைகளைக் கொள்ளையடித்துச் செல்வது, கல்லூரி பல்கலைக்கழக வளாகங்களில் நுழைந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது அதிகாரிகளையே கொன்றுவிட்டு கணிமக் கொள்ளைகளில் ஈடுபடுவது, நில மோசடிகளில் ஈடுபடுவது, கௌரவ-சாதிய கொலைகளை செய்வது, அரசாங்கத் துறைகளைக் கைப்பற்றிக் கொண்டு ரவுடி ராஜ்ஜியம் செய்லது எல்லாமே அவர்களின் மிச்ச சொச்சங்கள்தான். அம்மூர்க்கப் போக்கிரி வழிப்பறி குண்டர்களின் அட்டகாசங்களை ஒழிக்கவே காவல்துறையே உருவாக்கப்பட்டது.
'Thugs & Pindaris' இத்தியச் சமூகத்தையே அச்சுறுத்திய, இன்றும் அச்சுறுத்தி வருகிற ஒரு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு தவறான வாழ்வியல் முறை. அது போன்ற நெறியற்றவர்களின் வாழ்வியலைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ஒரு அடையானத்தை ஏற்படுத்தித் தரும் வகையில் திரைகங்களுக்கு பெயரிடுவது கூட சமூகத்திற்கும் நல்லதல்ல நாட்டுக்கும் நல்ல.
எனவே, மூர்க்க போக்கிரி குண்டர்களுக்கு ஒரு முகவரியை ஏற்படுத்தும் விதத்தில் தனது திரைப்படத்திற்கு 'Thugite' எனும் பெயரைத் தவிர்க்க வேண்டும் என நடிகர் கமலை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!











Click it and Unblock the Notifications