எங்களுக்கா ஓட்டு இல்லை? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்ததே! கிருஷ்ணசாமி பதிலடி
சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 4 சதவீதம் வாக்குகளையே பெற்றது, 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. முதலில் அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிமுகவில் தங்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. அதிமுக எங்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு ஒருவர் மூலமாக முதலில் 10 தொகுதிகளை கேட்டனர். முடியாது என்றோம். பின்னர் 5 தொகுதிகளை குறைத்துக் கொண்டு 5 தொகுதிகளை கேட்டனர். அதற்கும் தர முடியாது என நாங்கள் சொல்லிவிட்டோம்.
கடந்த 2021 ஆம் ஆண்டு எங்களுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. இதை சொல்லக் கூடாது, ஆனால் அவர் சொல்ல வைத்துவிட்டார். ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் சேரும் போது அந்த கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் சீட் கொடுப்பது வழக்கம். 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் பெற்ற கிருஷ்ணசாமிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க முடியும்?
அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எல்லாருமே இப்படித்தான் விதிகளை கடைபிடித்து வருகிறார்கள். எங்களுடன் கிருஷ்ணசாமி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவருக்குத் தேவையானவரை அனுப்பியிருந்தார். நாங்கள் இயலாது என சொல்லிவிட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். அதில் ஸ்ரீவில்லிபுத்தூர், நெல்லை ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரத்தில் போட்டியிடுகிறார்.
இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தினேன்.
எங்களுடன் ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்பது பழனிசாமிக்குத்தான் தெரியும். நாங்கள் குறைந்த வாக்குகளை பெற்றதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரியில் 4 சதவீதம் வாக்குகளையும் அதிமுகவின் கோட்டை என சொல்லப்படும் நெல்லையில் 8.4 சதவீதம் வாக்குகளையும் பெற்றது.
அது போல் தேனியில 13.6 சதவீதமும் ராமநாதபுரத்தில் 9.2 சதவீத வாக்குகளையும் பெற்றது. தென்காசியில் புதிய தமிழகம் 22.1 சதவீதம் வாக்குகளை பெற்றது. விருதுநகர் தொகுதியில் தேமுதிக 35.8 சதவீதம் வாக்குகளை பெற்றது.
திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி 11.1 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்த புள்ளி விவரங்களில் இருந்தே நாங்கள் பெற்ற வாக்குகள் அனைவருக்கும் தெரியும். 9 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட 3 சட்டசபை தொகுதிகளில் ஒன்றை கேட்டேன். எங்களால் இந்த முறை அதிகமாரக பாதிக்கப்டபோவது அதிமுகதான். அக்கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியாது. தேர்தல் ஆணையத்தை அணுகி தனி சின்னத்தை பெறுவோம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications