Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயுடன் கூட்டணி சேரும் கிருஷ்ணசாமி? மகாராஷ்டிராவை காட்டி புதிய தமிழகம் அனுப்பிய ‛மெசேஜ்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026ல் கூட்டணி ஆட்சிக்கு தயாராகுங்கள். தமிழக அரசியல் கட்சிகளுக்கு ‛மகாயுதி' கூட்டணி சொல்லும் பாடம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அனைத்து கட்சிகளுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது. இதில் விஜய் கூறிய கூட்டணி ஆட்சியை அவர் குறிப்பிட்டு உள்ளார். அதில் விஜயை தம்பி என்று பாசத்தோடு தெரிவித்துள்ளதால் புதிய தமிழகம் கட்சி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இணைகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 230 இடங்களில் வென்று அசத்தி உள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைக்கிறது.

puthiya tamilagam tvk vijay

மறுபுறம் காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா அணி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‛‛2026ல் கூட்டணி ஆட்சிக்கு ஆயத்தமாகுங்கள்.. தமிழக அரசியல் கட்சிகளுக்கு ‛மகாயுதி’ கூட்டணி சொ்லும் பாடம்!’’ என்ற பெயரில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் திமுகவை விமர்சித்துள்ள கிருஷ்ணசாமி, நடிகர் விஜயின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை குறிப்பிட்டு காங்கிரஸை நேரடியாகவும், கம்யூனிஸ்ட்டை மறைமுகமாகவும் புதிய கூட்டணிக்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஒன்றிணைந்து பெரும் வெற்றியை ஈட்டி இருக்கிறார்கள். சிவசேனாவை உடைத்து ஏக்நதா ஷிண்டேவும், சரத்பவார் கட்சியை உடைத்து அஜித் பவாரும் பாஜகவுடுன் ஒன்றிணைந்து கடந்த 2002 முதல் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார்கள். அந்த கூட்டணி ஆட்சி தொடருமா ? என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் எதிர்பார்ப்புகளையும், கருத்துகளையும் விஞ்சி 288 இடங்களில் 233 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.

ஆட்சியின் நலத்திட்டங்களால் வெற்றி பெற்றார்களா? கூட்டணிபலத்தால் வெற்றி பெற்றார்களா? எனில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற ‛‛கூட்டணி ஆட்சி கோட்பாடு’’ பலத்தால் ‛‛மகாராஷ்டிரா மஹாயுதி அணி’’ வெற்றி பெற்றுள்ளது. மாறாக, ஆட்சி அதிகாரத்தில் பங்க கொடுக்க மனமில்லாத ‛திராவிட மாடல்’ போன்ற கூட்டணியால் அல்ல!

"அதிமுகவின் 5 அதிசயத்திலும் இருப்பவர்".. எடப்பாடிக்கு நடிகர் தம்பி ராமையா ஆதரவு.. ஈபிஎஸ் ரியாக்ஷன்


தற்போது வரை பாஜகவே அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சி எனினனும், எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் குறைந்த சட்டமன்ற உறுப்பினர் என்ணிக்கையில் இருந்த ஏக்நாத் ஷிண்ேடை முதல்வர் ஆக்கி தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகி தன்னை ஒரு படி இறக்கி கொண்டார். ஷிண்டேவின் சிவசேனாவும முக்கிய பொறுப்புகளுடன் ஆட்சியில் உள்ளனர். இனியும் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் என்ற நிலை தொடருமா?அல்லது வேறு புதிய சூழல்கள்உருவாகுமா? என பொறத்திருந்து பார்ப்போம். இது வேறு.

நடந்து முடிந்த தேர்தல் மடிவுகள் மகாராஜ்டிராவிற்கு மட்டுமல்ல; பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அமையம். 2026ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள தமிழகத்திற்கு இது நன்கே பொருந்தும்.! தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான பல சந்தரப்பங்கள் ஏற்பட்டும் தமிழக கடசிகள் நழுவ விட்டுவிட்டன. ராஜாஜி உறுதியாக நின்றிருந்தால் 1967 லேயே திமுக - சுதந்திரா - கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு இருக்கும்.


இந்திரா காந்தி கண் அசைத்திருந்தால் 1971ல் திமுக - காங்கிரஸ் கூ்டணடி ஆட்சி அமைந்திருக்கும். அதேபோன்று ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின்னர் 1991லும், 1996 தோல்விக்கு பின்னர் திமுக - தமகா; 2006ல் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சிகள் மலர்ந்திருக்கும். ஆனால் , காங்கிரஸ் மத்தியில் ஆட்சி என்ற ஒரே கவவுடன் மாநிலங்களிலும் ாட்சியை இழந்தார்கள். விளைவு நாளடைவில் மாநில கட்சிகளுக்கே இரையாகிவிட்டார்கள்.

‛‛ஆட்சியில் பங்கு இல்லை; சீட் வேண்டுமானால் ஒன்று, இரண்டு வேண்டுமென்றால் கூடுதலாக கேட்டு பெறுங்கள்’’ என திமக மீண்டும் தனது நிலையைதெளிவுப்படுது்தி விட்டது. 10 தொகுதிகளை கேட்டு பெற்று, அதி்ல வெற்றி பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கும் சில கோரிக்கைகை கூட நிறைவேற்ற மன்றாடும் நிலைதான் இனுியும் இருக்கும் என்பது பொதுவுடமைவாதிகளுக்கு புரிந்தும் புரியாதது போல் மீண்டும்நடந்து கொள்ள பேகாிறார்களா? தமிழக புதிய அரசியல்சூழலுக்கு காங்கிரஸ் தன்னை ஆயத்தப்படுத்தி கொள்ளுமா?

2026ல் தமிழகத்தில்கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான அரிய தருணம்.! அதற்கான அஸ்திரத்தை தம்பி விஜய் ஏற்கனவே தொடுத்துள்ளார். மித மிஞ்சிய ஊழலும், கனிம வளக் கொள்ளை, டாஸ்மாக் ஊழல் ம்றும் அதனைால் ஏற்படும் பாதிப்புகளிிருந்து தமிழகத்தை விடுவிக்க தனிப்பட்ட மனமாச்சாரியங்களை மறந்து வெறப்பு அரசியலை ஒதுக்கி, அர தமிழகத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு குறைந்தபட்ச செயல்திட்டத்தில், ஆட்சிஅதிகாரத்தில் பங்கு என்ற மழக்கத்துடன் தமிழக அரசில் கட்சிகள் ஓரணியில் திரற வேண்டும் என்பதே மகாராஷ்டிரா தேர்தில் முடிவுகள் சொல்லும் பாடமாகும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையில் விஜயை தம்பி என்றும், அவர் ஏற்கனவே கூட்டணி ஆட்சிக்கான அழைப்பை விடுத்துள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். அதோடு திமுகவை விமர்சனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சி புதிய அரசியல் சூழலுக்கு ஆயத்தப்படுத்துமா? என்பதன் மூலமும், பொதுவுடைமைவாதிகள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர் மறைமுகமாக குறிப்பிட்டு கூட்டணி ஆட்சிக்கு தயாராக வேண்டும் என்பது போல் சொல்லி உள்ளார். இதனால் நடிகர் விஜயுடன் இணக்கமாக கூட்டணியில் இணைந்து செயல்பட கிருஷ்ணசாமி முடிவு செய்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+