அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைங்க.. ஆளுநரிடம் கிருஷ்ணசாமி கோரிக்கை! என்னவாம்?
சென்னை : டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்து வரும் இந்த ஊழல் குறித்து ஆளுநர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாகச் செயல்படும் பார்களை மூட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையேற்று நடத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பேரணியை நிறைவு செய்த கிருஷ்ணசாமி, ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, "திராவிட மாடல் என்று பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் வகையில் பூரண மதுவிலக்கை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மதுபான உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை ஆகியவை டாஸ்மாக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை மூலம் வரி வருவாயாக ரூ.44 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. இதனை அடுத்த ஆண்டில் ரூ.52 ஆயிரம் கோடியாக உயர்த்த அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழ்நாடெங்கும் சாராய கடைகளையும் சட்டவிரோத பார்களையும் திறந்துவைத்து தமிழர்களின் சீரழிவுக்கு காரணமானவர்கள் என்பதே கருணாநிதியின் வரலாறாக இருக்கும். எத்தனை சிலைகள் வைத்தாலும், அவர் பெயரில் நூலகங்கள் கட்டினாலும் அந்த வரலாறு மாறாது.
மதுபான கொள்முதல் சில்லறை விற்பனை, காலி அட்டைப்பெட்டி வரையிலும் நடைபெறும் ஒரு லட்சம் கோடி ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும். டாஸ்மாக் துறையில் நடைபெறும் இந்த ஊழலுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம். அமைச்சர் செந்தில் பாலாஜியும், உயர் அதிகாரிகளும் தண்டிக்கப்படும் வரையில் மது கொள்முதலை நிறுத்த ஆளுநர் ரவி உத்தரவிட வேண்டும்.
டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்து வரும் இந்த ஊழல் குறித்து ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சருக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும். இந்த போராட்டம் துவக்கமே தவிர, முடிவு அல்ல. அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications