“நானும் ரவுடிதான்” போல இருக்கிறது! திமுக குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி விமர்சனம்
சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போட்டி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த கருத்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சனம் செய்துதுள்ளார்.
பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது, பாஜகவை வலுப்படுத்துவது குறித்த பல்வேறு ஆலோசனைகளை அண்ணாமலை நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் திமுக குறித்தும் பேசியிருந்தார்.

அதாவது, "தமிழகத்திலிருந்து அதிக உறுப்பினர்களை மக்களவைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி அனுப்பி வைக்கும். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போட்டி. தமிழகத்தின் 39 தொகுதிகளையும் கைப்பற்றுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நாளை சேரலாம். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதே எங்கள் நோக்கம்" என்று கூறினார். இதனையடுத்து, 'அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடுவீர்களா?' என்கிற கேள்விக்கு, "உரிய நேரம் வரும் போது பதில் கூறுவேன்" என்று கூறினார்.
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த அளவில் அதிமுகவும் பாஜகவும் இணைந்துதான் தமிழ்நாட்டில் இந்த தேர்தலை எதிர்கொள்ளும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால் சமீபத்தில் அறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அதிமுக பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய விஷயங்களை பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை ஏன் பங்கேற்றார் என்று கேள்வியெழுப்பி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில்தான் அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறித்து பேசியிருந்தார். இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தங்கள் கட்சி தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வருவதாக கூறி இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது. இதற்கு பாஜகவின் மேலிடத்திலிருந்து அண்ணாமலையிடம் சரமாியாக கேள்வி எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சலசலப்புக்கு மத்தியில்தான் தமிழக பாஜகவின் மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்தான் "மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கும், பாஜகவுக்கும்தான் போட்டி" என அண்ணாமலை கூறியிருந்தார்.
இதற்கு திமுக நிர்வாகிகள் பலர் விமர்சனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அதாவது, "தமிழக அரசு கோவில் நிலத்தை கொள்ளை அடிக்கிறது என்று பிரதமர் மோடி பேசுகிறார். தமிழக வரலாறு பிரதமருக்கு தெரியாது. ரூ.75,000 கோடி சொத்துக்கள் தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது. அதுதான் பிரதமருக்கு கோபம். பாஜக எந்த கோயிலின் கருவறை உள்ளே பெண்களை அனுமதித்தது உண்டா? ராகுல் காந்தி, மகாத்மாவை போல அன்பை விதைக்கிறார், நீங்கள் கோட்சேவை போல வெறுப்பை விதைக்கிறீர்கள். பாஜகவுக்கு திமுக போட்டி என்று அண்ணாமலை சொல்வது நானும் ரவுடிதான் என்பதைப் போன்று உள்ளது" என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி, "கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநியாயம்" என திமுகவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications