"இது பிரதமர் செய்யும் பெரிய வேலையா".. அழகிரி கைக்கு போன டேட்டா.. அதிகார வெளிச்சத்தில் ஆட்டமா: நறுக்
பெங்களூரு-மைசூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த நிலையில் கே.எஸ்.அழகிரி பிரதமர் மீது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
சென்னை: பெங்களூரு டூ மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவுக்கும் மைசூருக்கும் இடையே சுமார் 149 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை கடக்க எப்படியும் 3.30 மணி நேரம் ஆகும். ஆனால் இரண்டும் மிகப்பெரிய நகரங்கள். எனவே இந்த தொலைவை குறைக்க, இங்கு எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதனையடுத்து சாலை அமைக்கும் பணி ரூ.8,480 கோடி செலவில் 118 கி.மீ நீளத்திற்கு தொடங்கப்பட்டது.
இந்த சாலைகள் முழுவதும் 6 வழிச் சாலைகளாகும். இப்பணி சமீபத்தில் முடிவுற்றதையடுத்து இச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த புதிய சாலை மூலம் பெங்களூருவிலிருந்து மைசூருக்கு சுமார் 1.15 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அந்த அளவுக்கு சாலைகள் அனைத்தும் விரிவாகவும், தரமானதாகவும் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சியினர் இதனை விமர்சனம் செய்துள்ளனர்.

கர்நாடக தேர்தல்
அதாவது, இன்னும் ஒருசில மாதங்களில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது பிரதமர் சாலையை திறந்து வைத்திருப்பது வாக்கு வங்கி அரசியலுக்காகதான் என்று விமர்சித்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளதாவது, "ஒரு சாதாரண சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்துவிட்டு, இது மிகப்பெரிய சாதனை போல பெருமைப்பட்டுள்ளார். இதுதான் பிரதமர் செய்யும் மிகப்பெரிய வேலையா? ரோடு போடுவது வழக்கமானதுதான். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இந்த வேலைகள் வழக்கமாக நடந்துக்கொண்டுதான் இருக்கும்.

கே.எஸ்.அழகிரி
இதை தவிர ஏதாவது ஒரு சிறப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாடு முழுவதும் சிறப்பாக பேசப்படும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வரை விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்ற கூறினார்கள். ஆனால் என்ன நடந்தது? அவர்களால் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் காங்கிரஸ் கட்சி அதை சாத்தியமாக்கியது. எனவே விவசாயிகளும், பொது மக்களும் பலனடைந்தார்கள். அதேபோல பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொடுத்த முக்கியமான மற்றொரு வாக்குறுதி, 2 கோடி பேருக்கு வேலை என்பதுதான்.

வேலையின்மை
ஆனால் யதார்த்தத்தில் இங்கு இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்தான். எரிபொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பின் பொருளாதாரத்தில் பெரிய அளவுக்கு பாதிப்பு வராது. மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் 108 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சமையல் கேஸ் விலை ரூ.70 மற்றும் ரூ.400 ஆக இருந்தது. ஆனால் இப்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலர்களாக குறைந்திருக்கிறது.

எரிபொருள் விலை
இப்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100ஐ கடந்து விற்பனையாகிறது. அதேபோல சமையல் கேஸ் சிலிண்டர் விலையானது ரூ.1,100 ஆக அதிகரித்துள்ளது. ஆகவே இவற்றின் விலைகளை குறைத்திருந்தால் பெருமைப்படலாம். இப்படி மக்களை கசக்கி பிழிந்துவிட்டு நாடு வளர்ச்சி அடைந்துவிட்டது என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது? தமிழ்நாட்டை பொறுத்த அளவில் பாஜகவுக்கு அமைப்பும் கிடையாது, மக்கள் ஆதரவும் கிடையாது. இப்போது மத்தியில் இருக்கும் ஆட்சியின் அதிகார வெளிச்சத்தில் ஆட்டம் போடுகிறார்கள். இது வெற்றிக்கு உதவாது, மட்டுமல்லாது எதிர் வரும் தேர்தலில் ஒரேயொரு சீட்டை கூட அவர்களால் வெல்ல முடியாது" என்று கூறியுள்ளார்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை!












Click it and Unblock the Notifications