தமிழர்களின் நன்றி மறவாமை பண்பை உலகிற்கு பறை சாற்றும் பொங்கல்! தமிழக காங்கிரஸ் வாழ்த்து!
சென்னை: தமிழர்களின் நன்றி மறவாமை பண்பை உலகிற்கு பறை சாற்றும் பண்டிகை பொங்கல் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிக்கைக்கு இப்படியொரு வரலாறு இருக்கிறதா என்ற வகையில் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள பதிவு வருமாறு;
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்துத் தரப்பு தமிழ் மக்களாலும் கொண்டாடும் இந்த பொங்கல் விழா, விவசாயிகள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அத்தனை நாளும் தமக்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நன்னாளாகும். அன்றைய தினம் குளித்து புத்தாடை அணிந்து நண்பர்களுடனும், உறவினர்களுடனும் இணைந்து இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மேலும், கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழா மாட்டுப்பொங்கல். இது இரண்டாம் நாள் விழாவாகும். குறிப்பாக, இந்நாளில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளை மாடுகளுக்கும், இல்லத்தை செழிப்புறச் செய்யும் பசு மாட்டிற்கும் பொங்கலிட்டு வழிபாடு செய்யப்படுகிறது.
நாகரீக வளர்ச்சியில் கலாச்சாரத்தின் தாக்கம் மற்றக் கலாச்சாரங்களின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும். ஆனால், பொங்கல் பண்டிகை என்பது மற்றைய கலாச்சாரத்தை தம்முடன் இணைத்துக் கொண்டு மேன்மேலும் சிறப்புப் பெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை உலகிற்கு பறை சாற்றுவதாகவும் உள்ளது.
'உழவே தலை" என வாழ்ந்த உழைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல, மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல், உணவு இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா
வருகிற ஜனவரி 14 அன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மணிப்பூரிலிருந்து இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை தொடங்கவிருக்கிறார். இந்தப் பயணம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், வருகிற மக்களவைத் தேர்தலில் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கான தீவிர முயற்சியாக அவரது பயணம் அமைய இருக்கிறது.
தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பயணம் வெற்றியடைய மனதார வாழ்த்துகிறேன். அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிப் பரவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications