சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செம மூவ்.. திமுகவே இறங்கி அடிக்கும்போது.. நாம இப்படி இருக்கலாமா.. அதிரடியில் குதித்த அழகிரி

நாங்குநேரி வெற்றிக்கு உழைக்க அழகிரி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுகவே இறங்கி அடிக்கும்போது.. நாம இப்படி இருக்கலாமா..அதிரடியில் குதித்த அழகிரி தொண்டர்கள் !-வீடியோ

    சென்னை: "அவங்களே முகாமிட்டு வேலையை பார்த்து வரும்போது.. நாம ரெண்டு மடங்காவது இருக்க வேணாமா.. வாங்க.. எல்லாரும் இறங்கிவந்து வேலையை பாருங்க" என்று கேஎஸ் அழகிரி நாங்குநேரி நிர்வாகிகளுக்கு அட்வைஸ் தந்துள்ளார்!

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னமேயே நாங்குநேரிக்கு நான், நீ என்று போட்டியிட்டது திமுகவும் - காங்கிரஸும். இதில் தமிழக காங்கிரஸ் சற்று அடம் பிடிக்கவே செய்தது. ஒரு கட்டத்தில் தனித்து போட்டியிடவும் தயாரானது.

    ஆனால், இப்படி நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடும் விவகாரம் முதலில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கே விருப்பம் இல்லையாம்.

    ஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு!ஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு!

    நெருக்கம்

    நெருக்கம்

    "பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே எப்படி நடக்கும் என்பது தெரியும். அதனால் போட்டியிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அப்படி போட்டியிடவில்லையானால், நான் திமுகவுக்கு விலை போய்விட்டதாக சொல்லிவிடுவார்கள்" என்று நெருக்கமானவர்களிடம் அழகிரியும் மனம் திறந்து பேசினார் என்றும் தகவல் ஒன்று வந்தது.

    தாராளம்

    தாராளம்

    இந்த சமயத்தில் திமுகவும் நாங்குநேரியை காங்கிரசுக்கு விட்டு தந்து தாராளத்தை காட்டியது. இதற்கடுத்துதான் வேட்பாளர் பிரச்சனை ஆரம்பமானது. ரூபி மனோகரனுக்கு இன்றுவரை நல்ல ஆதரவு தொகுதிக்குள் இல்லை. பசையுள்ள பார்ட்டி என்றாலும், வெளிமாவட்ட ஆள் என்ற பார்வை அவர் மீது உள்ளது. அதனால் லோக்கல் காங்கிரஸில் ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கிறது. இதுதான் அழகிரிக்கு இப்போது கலக்கத்தை தந்துள்ளது.

    பீதி - கலக்கம்

    பீதி - கலக்கம்

    ஏற்கனவே இடைத்தேர்தல் என்பது ஆளும் தரப்புக்கு பொதுவானது, இப்போது தேனி பார்முலாவில் கண்டிப்பாக இறங்கும். அதனால் உள்ளடி வேலை, ஒத்துழைப்பின்மையால் உள்ளூரில் காங்கிரஸ் மண்ணை கவ்விடக்கூடாது என்பதே அழகிரியின் பீதி!

    அறிவுறுத்தல்

    அறிவுறுத்தல்

    அதனால்தான் முன்னாள், இன்னாள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் எல்லாருமே இறங்கி நாங்குநேரியில் வெற்றி பெற உழைக்க வேண்டும். நமக்காக திமுக தரப்பில் முகாமிட்டு வேலை செய்யும்போது, நாமும் அவர்களை விட பல மடங்கு உழைக்க வேண்டும்" என்று அட்வைஸ் தந்துள்ளாராம். ஒருவேளை யாராவது சரியாக வேலை பார்க்கவில்லை என்றாலும், அவர்களின் பெயரை நோட் செய்து மேலிடத்துக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளாராம்.

    ப சிதம்பரம்

    ப சிதம்பரம்

    ப.சிதம்பரம் கைதுக்கு கட்சி தரப்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தும்போது உட்கட்சி பூசலால் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த கோபமே அழகிரிக்கு இருக்கும்போது, இப்போது தேர்தல் வேலையை பார்க்காமல் விட்டால், களையெடுக்கப்பட்டு விடுவோமோ என்று நிர்வாகிகள் பயந்துவிட்டனர். அதனால், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நிர்வாகிகளும், வேறு வழியில்லாமல் தேர்தல் களத்தில் குதித்து வேலையை பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    English summary
    KS Alagiri advised the Party Executives to work hard for the success of the Nanguneri constituency by elections
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X