யாரும் செய்யாததையா கே.டி ராகவன் செய்துவிட்டார்? வீடியோ வெளியிட்ட மதன் மீது நடவடிக்கை எடுங்க : சீமான்
சென்னை: கேடி ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று, யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே. டி ராகவன். கட்சியின் மூத்த உறுப்பினரான இவருக்கு எதிராக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வீடியோ கால் ரெக்கார்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
பாஜக முன்னாள் உறுப்பினர் மதன் ரவிசந்திரன் என்பவர் தனது யூ டியூப் சேனலில் இந்த வீடியோவை வெளியிட்டு கே.டி ராகவனுக்கு எதிராக குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த வீடியோவை தொடர்ந்து கே. டி ராகவன் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பதவி விலகினார்.

பேச கூடாது
இந்த நிலையில் கேடி ராகவன் வீடியோ விவகாரம் குறித்து நாம் தமிழர் சீமான் பேட்டி அளித்துள்ளார். அதில், இதை எல்லாம் பற்றி பேச கூடாது. இதெல்லாம் ஒரு சமூக குற்றமா? கேடி ராகவன் விவகாரம் தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்று. தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வதுதான் சமூக குற்றம். யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்.

யாரும் செய்யாதது
உலகத்தில் நடக்காத ஒன்றையா கே.டி ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம் பிடிப்பது குற்றம். அந்த வீடியோவை வெளியே விடுவதும் குற்றம். அவருடைய அனுமதி இல்லை வீடியோ எடுப்பது தவறு. அவருடைய படுக்கை அறைக்கு, கழிவறைக்கு சென்று வீடியோ எடுப்பது எப்படி சரியாகும்.

என்ன நடக்கிறது?
என்ன நடக்கிறது? வீடியோ எடுத்து அதை வெளியிட்டவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபைக்கு உள்ளே ஆபாச காட்சிகளை பார்ப்பது தவறு. அப்படி ஏதாவது நடந்தால் தவறு. நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் செய்ததை ரெக்கார்ட் வெளியிடுவது தவறு.

ரெக்கார்ட்
கேடுகெட்ட சமூகம் ஆகிவிட்டோம் நாம். யார் யாரோடு பேசுகிறார் என்பதை ஒட்டுக்கேட்பது, அதை பதிவு செய்வது, வெளியிடுவது தவறு. இதனால் என்ன சாதிக்க முடியும், இதை வைத்து என்ன செய்ய போகிறார்கள். இதெல்லாம் பிரச்சனையா? சமுதாயத்தில் அவ்வளவு பிரச்சனைகள் நடக்கிறது.

பிரச்சனையா?
நாடாளுமன்றத்தில் விவாதமே இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. கொடுங்கோன்மையான சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதுதான் நாட்டின் பிரச்சனை. இந்த பிரச்சனைகளை பற்றி பேசாமல் யாரோ வீடியோ வெளியிட்டதை, ஆடியோ வெளியிட்டதை பற்றி ஏன் பேசுகிறார்கள், என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
கொங்கு மண்டலத்தில் அஸ்திவாரம்.. அதிமுக திமுக மாஜிக்களுக்கு வலை.. அண்ணாமலை பலே பிளான் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications