விஜயலட்சுமி புகார் தந்தாரே.. சீமானிடம் கேட்டீர்களா?.. கேடி ராகவன் பற்றிய கேள்விக்கு அர்ஜுன் சம்பத்!
சென்னை: கேடி ராகவன் வீடியோ சர்ச்சை குறித்த கேள்விக்கு இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பரபரப்பு பதில் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் கே. டி ராகவன். இவருக்கு எதிராக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வீடியோ கால் ரெக்கார்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவை தொடர்ந்து கே. டி ராகவன் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து பதவி விலகினார். இந்த நிலையில் இந்த வீடியோ குறித்தும், விநாயகர் சதுர்த்தி ஊர்வல தடை குறித்தும் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் இன்று பேட்டி அளித்தார்.

அர்ஜுன் சம்பத்
அர்ஜுன் சம்பத் தனது பேட்டியில், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதை பலர் தவறாக பயன்படுத்துகிறார். திக, விசிகவினர் உள்ளிட்டோர் கொடுக்கும் அழுத்தம் நிர்ப்பந்தம் காரணமாக கூட வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது பட்டியலின மக்களை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம். ஆனால் இதை முறையாக பயன்படுத்துவது கிடையாது.

கட்டப்பஞ்சாயத்து
வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இதை பயன்படுத்தி அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். பணம் வசூல் செய்கிறார்கள். இதனால் இதை மாற்ற வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஒருதலைப்பட்சமாக தடை விதித்து இருக்கிறார்கள். கொரோனா பரவலை காரணம் காட்டி இப்படி செய்துள்ளனர்.

கொரோனா
கொரோனா கட்டுப்பாட்டு பணிகளை மதிக்க நாங்கள் தயார். கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நாங்கள் ஊர்வலம் நடத்த தயார். தமிழ்நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது என்று கூறுகிறார்கள். தளர்வுகள் வந்துவிட்டது. தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டது. பள்ளி, கல்லூரிகள் திறந்து உள்ளனர். அப்படி இருக்கும் போது விநாயகர் சதுர்த்தி விழா மூலம் மட்டும் எப்படி கொரோனா பரவும்.

விநாயகர் சதுர்த்தி
நாங்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி ஊர்வலம் நடத்த தயார். பனிமலை மாத சர்ச் தேரோட்டத்திற்கு அனுமதி, கன்னியாகுமரி சவேரியார் சர்ச்சில் இதேபோன்ற அனுமதி கொடுத்தனர். அதேபோல் எண்களின் வழிபாட்டு உரிமையை மதிக்க வேண்டும். இல்லையென்றால் கட்டுப்பாட்டை மீறி ஊர்வலம் நடத்துவதும். தமிழ்நாடு முழுக்க அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம்.

டாஸ்மாக்
டாஸ்மாக் கூட்டத்தில் வராத கொரோனாவா இதில் வந்துவிட போகிறது. கோவிலில் செய்யப்படும் யாகங்கள் கொரோனாவை குணப்படுத்தும். கோவில்களை திறந்தால் கொரோனா ஓடிவிடும். டாஸ்மாக் மூலம்தான் கொரோனா பரவுகிறது. இந்து மதத்தை யார் அவமதித்தாலும் தவறு. உண்மைதான். அடித்து கை காலை உடைத்து விடுவேன். அது கேடி ராகவனாக இருந்தாலும் சரி.

கேடி ராகவன்
கேடி ராகவன் மட்டும் கிடையாது. இந்து மதத்தை யார் அவமதித்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெண் ஒருவர் உங்களிடம் பேசினால் நீங்க பேச மாட்டீர்களா? அங்கே நடந்தது ஸ்டிங் ஆப்ரேஷன் கிடையாது. திருமாவிற்கு எதிராக பெண் ஒருவர் புகார் கொடுத்தாரே.. அவரிடம் போய் கேளுங்கள். சீமான் கிட்ட போய் கேளுங்கள். விஜயலட்சுமி புகார் கொடுத்தாரே.

கேடி ராகவன்
கேடி ராகவனுக்கு எதிராக யார் புகார் கொடுத்தது? வாருங்கள் கேடி ராகவனை தூக்கில் போடலாம் (கிண்டலாக சொல்கிறார்). வாருங்கள் கேடி ராகவனுக்கு எதிராக போராடுங்க. கேடி ராகவனுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்துள்ளனர். பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட காவி அமைப்புகளை எதிர்த்தால் காவி என்று தீ உங்களை சுட்டு எரிக்கும், என்று அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications