சீமான் எதிர்ப்பு அணி: தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் உதயகுமாரனின் பச்சை தமிழகம் கட்சி ஐக்கியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்ருட்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரனின் தலைமையிலான பச்சைத் தமிழகம் இணைந்துள்ளது. வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்போம் என்று சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தனித் தமிழ்நாடு கோரிய தமிழ்நாடு விடுதலைப் படையின் ஆதரவாளராக இருந்து பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தவர் பண்ருட்டி வேல்முருகன். பாமக எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார். பாமகவில் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

velmurugan sp udayakumaran

இதனையடுத்து வேல்முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கினார். பாமகவில் இருந்து வெளியே வந்து தனிக் கட்சி தொடங்கினாலும் தமது கட்சி ஜாதிய அடையாளத்துடன் நிற்காமல், தமிழ்நாட்டின் வாழ்வுரிமைக்காக போராடுகிற தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கிற கட்சியாக இருக்கும் என்பதில் வேல்முருகன் கவனமுடன் செயல்பட்டும் வந்தார்.

இதன் பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதாக பேசி வருகிறார். இருந்தபோது வேல்முருகனும் சீமானும் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் அவ்வப்போது கை கோர்த்திருந்தனர்.

அண்மையில் சீமானை விட்டு வெளியேறியவர்கள், வேல்முருகனுடன் கை கோர்த்துள்ளனர். திருச்சியில், நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் ஒருங்கிணைத்த மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் வேல்முருகன் பங்கேற்றுப் பேசினார்.

இதன் பின்னர், தேர்தல் அரசியலை விட்டு ஒதுங்கி நின்று தமிழ்த் தேசியப் போராளிகளுக்கு வாய்ப்பு தர விரும்புகிறேன் எனவும் வேல்முருகன் கூறியிருந்தார்.

இதனிடையே மலேசியாவின் பினாங்கு நகரில் நடைபெறும் உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றார் வேல்முருகன். அங்கு தமிழ்நாடு அரசின் கதர்த்துறை சார்பில் நடைபெற்ற குறுந்தகடு வெளியிட்டு விழா மற்றும் வட்டமேசை நிகழ்வில் பினாங்கு மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர், தமிழ்நாடு பால்வளம் மற்றும் கதர் வாரியதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரன், ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, பினாங்கு மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரோடு வேல்முருகன் பங்கேற்றார்.

இந்த பின்னணியில் சென்னையில் நேற்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும் பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவருமான சுப. உதயகுமாரன் செய்தியாளர்களை சந்தித்து தமது கட்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் இணைத்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளார். இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். இந்த இணைப்பு மூலம் சீமானுக்கு எதிராக 'உண்மையான தமிழ்த் தேசியம்' நாங்கள் பேசுவதுதான் என வேல்முருகனும் சுப. உதயகுமாரனும் பேச வாய்ப்பிருக்கிறது என்பதால் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+