மாற்றி யோசித்து உயிரையே காப்பாற்றிய ராயபுரம் காவலர்.. சென்னை போலீஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: சென்னை ராயபுரத்தில் காவலராக உள்ள விக்னேஷ் பாண்டி என்பவர் விபத்தில் சிக்கிய பாதசாரிக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியதுடன், அவரை 108 ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த தகவலை சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளதுடன் அவரை வெகுவாக பாராட்டி உள்ளது..
சாலையில் அடிப்பட்டு கிடந்தவர்களை காப்பாற்றுவது எல்லாம் தற்போது அரிதான நிகழ்வாக மாறிவிட்டது. எப்படி என்றால் அரசே 10000 ரூபாய் பணம் தருகிறோம்.. தயவு செய்து சாலையில் அடிப்பட்டவர்களை காப்பாற்றுங்கள் என்றும் சொல்லும் அளவிற்கு மாறிவிட்டது. அதிலும் மிக அரிதாகவே யாராவது காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். மற்றவர்கள் அதிகபட்சம் செய்யும் ஒரே விஷயம் காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பதுதான்.

காவல்துறை வந்து பார்த்துவிட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு அழைக்கும் அளவிற்கு நிலைமை பல நேரங்களில் ஏற்படுகிறது. அதேநேரம் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயலும் சிலர் உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு அழைப்பதுடன் காவல்துறைக்கும் அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட மனித நேயம் உள்ளவர்கள் அபூர்வமாகவே இருக்கிறார்கள்.
இப்படியான சூழலில் சென்னை ராயபுரம் சாலையில் அடிப்பட்டு மயக்க நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார் பாதசாரி ஒருவர். இதை பார்த்து அங்கு வந்த ராயபுரம் காவலர் விக்னேஷ் பாண்டி, ஒரு நொடி கூட யோசிக்காமல் பாதாசாரியை தூக்கி நாடி துடிப்பை சோதித்தார். குறைவாக இருந்த நிலையில், உடனடியாக அவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்தார். அவருக்கு மூச்சு வந்த நிலையில,, உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது உயிரை காப்பாற்றினார்.
காவலர் விக்னேஷ் பாண்டி விபத்தில் சிக்கிய பாதசாரியின் உயிரை காப்பாற்றிய வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்ட சென்னை பெருநகர காவல்துறை, காவலர் விக்னேஷ் பாண்டியை வெகுவாக பாராட்டி உள்ளது. விக்னேஷ் பாண்டியின் செயல் முன்மாதிரியான துணிச்சலானது என்றும், அவர் புத்திசாலித்தமான செயல்பட்டு விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றினார் என்றும் சென்னை காவல்துறை பாராட்டி உள்ளது.
காவலர் விக்னேஷ் பாண்டி சரியான நேரத்தில் எடுத்த நடவடிக்கை ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது என்றும், இவ்வளவு அர்ப்பணிப்பும் கருணையுடன் கூடிய செயல் காரணமாக சென்னை மாநகர காவல்துறைக்கு அந்த காவலர் பெருமை சேர்த்துள்ளார் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications