சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பதநீர் அருந்துவதால் விக்கல், நெஞ்சுகரிப்பு நீங்கும்... ரேஷன் கடைகளில் பனைப் பொருட்கள் -குமரி அனந்தன்

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கடைகளில் பனைப்பொருட்கள் விநியோகம் செய்வது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு காங்கிரஸ் மூத்த முன்னோடியும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கைப்பட எழுதியுள்ள கடிதத்தில்,

''உணபு பங்கீட்டுக் கடைகளில் பனைப் பொருட்கள் கொடுப்பது பற்றி தமிழக முதல்வர் பரிசீலிப்பதாக அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தமிழ்நாடு காந்தி பேரவை வரவேற்கிறது.''

Kumari Anandan welcomes the announcement of the Chief Minister about palm goods in ration shops

''பதனீர் அருந்துவதால் விக்கல், நெஞ்சுகரிப்பு நீங்கும். பனங்கருப்பட்டி உண்டால் ரத்த விருத்தி அதிகரிக்கும்.. அதன் நுங்கின் சுலை கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை தரும். கைவிசிறி, கைப்பை, முறம், படுக்கும் பாய், கட்டில் செய்ய நார், கீழே அமர தடுக்கு, விசிட்டிங் கார்டு, போன்ற பல பொருட்களை பனைமரம் மூலம் செய்யலாம்.''

''இதனை நீண்டகாலமாக காந்திபேரவை முறையிட்டு வருகின்றது. அதைப்பற்றிபரிசீலிக்கிறோம் என முதலமைச்சர் எடப்பாடி அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு நல்ல பொங்கல் பரிசாகும். இதற்கு காந்திபேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.''

''இத்துடன் பொங்கலன்று சமைப்பதற்கு தவிடு நீக்காத தவிட்டுடன் கூடிய அரிசியை பயன்படுத்த வேண்டும். உமி மட்டும் நீக்கப்பட்ட தவிட்டோடு இருக்கும் அரிசியே சத்துள்ளது..தவிடு நீக்காத தவிட்டரிசியில் வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் பி 12, வைட்டமின் கே 1, வைட்டமின் இ மற்றும் சுண்ணாம்பு சத்து உள்ளது.''

''அண்ணல் காந்தி தவிட்டு நீக்காத அரிசியை தான் பயன்படுத்தினார். இதனால் உணவு பங்கீட்டு கடைகளிலும் தவிட்டரிசியை வழங்க வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.''

English summary
Kumari Anandan welcomes the announcement of the Chief Minister about palm goods in ration shops
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X